Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site
தலைப்பு செய்திகள்

தபால் சேவை ஊழியர்கள் வேலை நிறுத்த போராட்டம்!

In இலங்கை
Published: 06:42 GMT, Sep 25, 2017 |
0 Comments
1064
icon_com
This post was written by : Anojkiyan
post

தபால் சேவை ஊழியர்கள் விரைவில் வேலை நிறுத்தத்தில் ஈடுபடவுள்ளதாக இலங்கை தபால் சேவை சங்கத்தின் தலைவர் ஜகத் மஹிந்த தெரிவித்துள்ளார்.

அதற்கான ஏற்பாடுகளை இலங்கை தபால் சேவை சங்கம் மேற்கொண்டு வருவதாகவும் அவர் குறிப்பிட்டார்.

கொழும்பு கோட்டையிலுள்ள பிரதான தபால் காரியாலய கட்டடத்தை அரசாங்கம் கையகப்படுத்தவுள்ளமைக்கு எதிராக வேலை நிறுத்தத்தில் ஈடுபடவுள்ளதாக அவர் தெரிவித்தார்.

இதுதொடர்பில் அவர் மேலும் கூறுகையில், “கண்டி, நுவரெலியா, காலி மற்றும் கொழும்பு கோட்டை பிரதான தபால் காரியாலய கட்டடங்களை வெளிநாடுகளுக்கு வழங்குவதற்கு அரசாங்கம் கடந்த காலங்களில் நடவடிக்கை எடுத்திருந்தது. எனினும் அதற்கெதிராக தபால் சேவை ஊழியர்கள் தொழிற்சங்க நடவடிக்கைகளை மேற்கொண்டிருந்தனர்.

அதன் பிரதிபலனாக நடைபெற்ற பேச்சுவார்த்தைகளின் போது குறித்த தபால் காரியாலயங்களின் கட்டடங்களை வெளிநாடுகளுக்கு வழங்குவதில்லையெனவும் அத்தபால் நிலையங்களை அபிவிருத்திசெய்யும் வேலைத்திட்டங்களையே முன்னெடுக்கவுள்ளதாகவும் அரசாங்கத்தால் தெரிவிக்கப்பட்டது.

இருந்தபோதிலும் கடந்த எட்டாம் திகதி தபால், தபால் சேவைகள் மற்றும் முஸ்லிம் சமய விவகார அமைச்சின் செயலாளர் தலைமையில் நடைபெற்ற பேச்சுவார்த்தையின் போது, கொழும்பு கோட்டை பிரதான தபால் காரியாலய கட்டடத்தை பிரதமர் அலுவலகத்தினால் கையகப்படுத்தப்படவுள்ளதாக அமைச்சின் செயலாளர் தெரிவித்தார்” என கூறினார்.

Banner
toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg