Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

காங்கிரஸ் தலைவராகின்றார் ராகுல்காந்தி

In இந்தியா
Updated: 06:36 GMT, Sep 25, 2017 | Published: 06:36 GMT, Sep 25, 2017 |
0 Comments
1214
This post was written by : Kemasiya

காங்கிரஸ் கட்சியின் துணைத் தலைவர் ராகுல்காந்தி விரைவில் காங்கிரஸ் கட்சியின் தலைவர் பதவியை ஏற்கவுள்ளதாக தெரிவித்துள்ளார்.

காங்கிரஸ் கட்சியின் தலைவரா ராகுல் காந்தி தெரிவு செய்யப்படவுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ள நிலையில், இது குறித்து கருத்து தெரிவித்த அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

கடந்த இரண்டு ஆண்டுகளாக தொடர் தோல்வியை சந்தித்து வரும் நிலையில், இதை தடுத்து நிறுத்தும் முயற்சியில் தான் காங்கிரஸின் தலைவர் பொறுப்பை ஏற்க்கவுள்ளதாக தெரிவித்துள்ளார்.

மேலும், தனது அமெரிக்க பயணம் முடிவடைந்ததை தொடர்ந்து, அடுத்தக்கட்டமாக ரஷ்யா, சீனா நாடுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளவுள்ளதாக ராகுல் காந்தி குறிப்பிட்டார்.

இதேவேளை, குஜராத் மாநிலத்தில் இந்த ஆண்டு இறுதியில் சட்டசபை தேர்தல் நடைபெறவுள்ளது எனவும் அதற்கு முன்னதாக ரஷ்யா, சீனா சுற்றுப்பயணங்களை முடிக்க ராகுல் முடிவு செய்துள்ளதாகவும்  செய்திகள் வெளியாகியுள்ளன.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg