Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site
தலைப்பு செய்திகள்

இந்திய தேசிய ஓபன் தடகள சம்பியன்ஷிப் போட்டிகள் ஆரம்பம்

In விளையாட்டு
Published: 07:01 GMT, Sep 25, 2017 |
0 Comments
1093
icon_com
This post was written by : Surenth
indian athletics 2017 on chennai

57ஆவது இந்திய தேசிய ஓபன் தடகள சம்பியன்ஷிப் போட்டிகள் சென்னை ஜவாஹர்லால் நேரு விளையாட்டு மைதானத்தில் இன்று (திங்கட்கிழமை) ஆரம்பமாகிறது.

இந்தப் போட்டிகள் 4 நாள்கள் நடைபெறுகிறவுள்ள நிலையில், பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த வீரர், வீராங்கனைகள் மற்றும் பொதுத்துறை நிறுவனங்களைச் சேர்ந்த வீரர், வீராங்கனைகள் என மொத்தம் 1,200 பேர் பங்கேற்கிறார்கள்.

இந்தப் போட்டியில் விளையாடவுள்ள, தமிழக வீரரான லட்சுமணன் மீது மிகப்பெரிய எதிர்பார்ப்பு காணப்படுகிறது. ஆசிய தடகள சம்பியன்ஷிப் போட்டியில் 5,000 மீ. மற்றும் 10, 000 மீ. ஓட்டங்களில் தங்கம் வென்ற லட்சுமணன், ஆசிய இண்டோர் தடகளப் போட்டியிலும் தங்கம் வென்றுள்ளார்.

இதுதவிர 400 மீ. ஓட்டத்தில் முகமது அனாஸ், ஆடவர் 20 கி.மீ. நடைப் போட்டியில் கணபதி கிருஷ்ணன்,400 மீ. ஓட்டப்போட்டியில் பூவம்மா மகளிர், ஈட்டி எறிதல் போட்டியில் அன்னு ராணி உள்ளிட்ட முன்னணி வீரர், வீராங்கனைகள் பங்கேற்கிறார்கள். தமிழகத்தின் சார்பில் 41 வீரர்களும், 35 வீராங்கனைகளும் பங்கேற்கிறமை குறிப்பிடத்தக்கது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg