Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

கடனட்டைகளை தொங்கவிட்டு தமிழக விவசாயிகளின் போராட்டம் தொடா்கிறது!

In இந்தியா
Updated: 08:13 GMT, Sep 25, 2017 | Published: 07:16 GMT, Sep 25, 2017 |
0 Comments
1163
This post was written by : Kemasiya
201709250243329321_Tamilnadu-Farmers-struggle-in-Delhi_SECVPF

தொடர்ந்தும் போராட்டம் நடத்தி வரும் தமிழக விவசாயிகள் மத்திய அரசின் கவனத்தை தமது பக்கம் ஈர்க்கும் வகையில் தமது கடன் அட்டைகளை கழுத்தில் தொங்கவிட்டபடி போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இன்று(திங்கள் கிழமை) 71 ஆவது நாளாகவும் தமிழக விவசாயிகள் டெல்லி ஜந்தர் மந்நதரில் மேற்கண்டவாறு தமது எதிர்ப்பை வெளிப்படுத்தி போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இவ்வாறு போராட்டம் நடத்துபவர்கள் குறித்த போராட்டத்தினூடாக, காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும், நதிகளை இணைக்க வேண்டும், உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கம் சார்பில் தமிழக விவசாயிகள் தொடர்ந்தும் போராடி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

மேலும், தொடர்ந்து போராட்டம் நடத்தும் இவர்கள் உண்மையில் விவசாயிகள் அல்ல என முன்வைக்கப்படும் விமர்சனங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக, தாம் விவசாயிகள் தான் என்பதை உறுதிப்படுத்தி இவர்கள் கழுத்தில் கடன் அட்டைகளை தொங்க விட்டு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg