Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site
தலைப்பு செய்திகள்

யோஷித்த ராஜபக்ஷவுக்கு இத்தாலி செல்ல நீதிமன்றம் அனுமதி!

In இலங்கை
Updated: 08:21 GMT, Sep 25, 2017 | Published: 07:14 GMT, Sep 25, 2017 |
0 Comments
1095
icon_com
This post was written by : Anojkiyan
yosi

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் புதல்வர் யோஷித்த ராஜபக்ஷவிற்கு இரண்டு வாரங்கள் இத்தாலி செல்வதற்கு கொழும்பு மேல் நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.

தனிப்பட்ட விஜயத்திற்காக இத்தாலி செல்வதற்கு அனுமதி வழங்குமாறு யோஷித ராஜபக்ஷவின் சட்டத்தரணி நீதிமன்றத்தில் கோரிக்கை விடுத்திருந்த நிலையில், எதிர்வரும் 28 ஆம் திகதி முதல் ஓக்டோபர் மாதம் 12 ஆம் திகதி வரை இத்தாலி செல்ல மேல் நீதிமன்றம் இன்று (திங்கட்கிழமை) அனுமதி வழங்கியது.

கடுவலை நீதவானுக்கு இதனை அறிவித்து கடவுச்சீட்டை தற்காலிகமாக விடுவிக்குமாறும், இந்த உத்தரவை குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களத்திற்கும், அரசாங்க புலனாய்வு பிரிவிற்கும் அறிவிக்குமாறும் உத்தரவிடப்பட்டுள்ளது.

சி.எஸ்.என் தொலைக்காட்சி சேவையை ஆரம்பிப்பதற்கு எவ்வாறு வருமானம் ஈட்டப்பட்டமை தொடர்பில் வெளிப்படுத்தாமை காரணமாக யோஷித ராஜபக்ஷவிற்கு எதிராக கடுவலை நீதவான் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg