Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

பௌத்த பிக்குகளுக்கு எதிராக குரல் கொடுப்பதை நிறுத்த வேண்டும்: எலப்பிரிய நந்தராஜ்

In இலங்கை
Published: 07:22 GMT, Sep 25, 2017 |
0 Comments
1186
icon_com
This post was written by : Ravivarman

இந்த நாட்டில் உள்ள பௌத்த பிக்குமார்களுக்கு எதிராக குரல் கொடுப்பதை அமைச்சர்கள் நிறுத்திக் கொள்ள வேண்டும் என அம்பகமுவ பிரதேச சபையின் முன்னாள் உறுப்பினரான எலப்பிரிய நந்தராஜ் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் ஜனாதிபதி மற்றும் பிரதமர் உடனடி கவனத்திற்கு கொண்டு நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரி இன்று (திங்கட்கிழமை) கினிகத்தேனை பிரதான பஸ் தரிப்பு நிலையத்திற்கு அருகில் மலைநாட்டு முற்போக்கு மக்கள் அமைப்பினர் எதிர்ப்பு நடவடிக்கையில் ஈடுபட்டனர்.

இதில் கலந்து கொண்டு கருத்துத் தெரிவிக்கும்போதே இதனைக் குறிப்பிட்டுள்ளார். இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்,

“பௌத்த நாட்டில் பிக்குகளுக்கு உரித்தான மரியாதையை வழங்காத பட்சத்தில் பௌத்த நாடு என்று சொல்லுவது கேள்விக்குறியாகும். அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் மக்கள் பிரதிநிதிகளான அமைச்சர்கள் அவ்வப்பகுதியில் பிக்குகளிடம் ஆசீர்வாதங்களைப் பெற்று அவரவர் பதவியில் அமர்கின்றனர்.

இவ்வாறு ஆசிகளைப் பெற்று பதவியில் அமரும் அமைச்சர்கள் பிக்குகளுக்கு எதிராக அவதூறு வார்த்தைப் பிரயோகங்களை பிரயோகிக்கின்றனர்.

இதனை உடனடியாக நிறுத்திக் கொள்ள வேண்டும் என கோரியே இந்த எதிர்ப்பு நடவடிக்கையும் தபால் அட்டை கையொப்பம் பெறலும் இடம்பெறுகின்றது” என எலப்பிரிய நந்தராஜ் தெரிவித்தார்.

இந்த எதிர்ப்பு நடவடிக்கையில் 100 இற்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டதுடன், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க ஆகியோரின் கவனத்திற்கு அனுப்பி வைப்பதற்கான தபால் அட்டைகளும் மக்களிடம் கையொப்பம் இட்டு பெறப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

DSC09888 DSC09879 DSC09876 DSC09873 DSC09872

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg