Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site
தலைப்பு செய்திகள்

கேரளாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஷார்ஜா மன்னர்

In இந்தியா
Published: 07:35 GMT, Sep 25, 2017 |
0 Comments
1121
icon_com
This post was written by : Kemasiya
201709241859124787_Ruler-of-Sharjah-in-Kerala-on-five-day-visit_SECVPF

கேரளாவிற்கு ஐந்து நாள் சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள ஷார்ஜா மன்னர் சுல்தான் பின் முஹம்மது அல்-காசிமி இன்று (திங்கள் கிழமை) திருவனந்தபுரம் வந்தடைந்தார்.

இவரை கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் மற்றும் இதர அமைச்சர்கள், அரசு உயாதிகாரிகள் என பலரும் சிவப்பு கம்பளம் மற்றும் மாநில பொலிஸாரின் அணிவகுப்புடன் வரவேற்றுள்ளனர்.

கடந்த வருடம் (2016) ஷார்ஜா நாட்டுக்கு சென்றிருந்த  கேரள முதலமைச்சர் பினராயி விஜயன், ஷார்ஜா மன்னர் சுல்தான் பின் முஹம்மது அல்-காசிமியை  அரசு விருந்தினராககேரளா வரும்படி அழைப்பு விடத்திருந்தார்.

இந்த அழைப்பின் பிரகாரம் ஷார்ஜா மன்னர் சுல்தான் பின் முஹம்மது அல்காசிமி இந்தியாவின் கேரளா மாநிலத்திற்கு வந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

ஷார்ஜா மன்னர் திருவனந்தபுரத்தில் உள்ள ராஜ் பவனில்ஆளுனர் சதாசிவத்தை நாளை சந்திக்கவுள்ளார். அதன் பின்னர் அழகிய கடற்கரை நகரமான கோவளத்தில் முதல் அமைச்சர் பினராயி விஜயன் அளிக்கும் சிறப்பு விருந்தில் பங்கேற்பார் எனவும் கூறப்படுகின்றது.

மேலும்  ஆளுநர் மாளிகையில் வரும் 26ஆம் திகதி கோழிக்கோடு பல்கலைக்கழகத்தின் சார்பில் நடைபெறும் பட்டமளிப்பு விழாவில் ஷார்ஜா மன்னருக்கு கௌரவ DR (வைத்தியர்)  பட்டம்  ஆளுநரால் வழங்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

எதிர்வரும் 28ஆம் திகதிவரை இங்கு தங்கியிருக்கும் அவர் வேறுசில நிகழ்ச்சிகளிலும் பங்கேற்பார் என எதிர்பார்க்கப்படுகின்றது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg