Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

பிரெக்சிற் விவகாரம்: நான்காம் கட்ட பேச்சுவார்த்தை ஆரம்பம்

In
Published: 07:21 GMT, Sep 25, 2017 |
0 Comments
1140
icon_com
This post was written by : Suganthini
Brxit

பிரெக்சிற் விவகாரம் தொடர்பில் ஐரோப்பிய ஒன்றியத்துடன் நான்காவது சுற்றுப் பேச்சுவார்த்தை பிரஸ்லஸில் இன்று (திங்கட்கிழமை) நடைபெறவுள்ளது.

இந்நிலையில், இந்தப் பேச்சுவார்த்தைக்கு பிரித்தானியாவின் சார்பில் பிரெக்சிற்றுக்குப் பொறுப்பான அமைச்சர் டேவிட் டேவிஸ் தலைமை வகிக்கின்றார்.

கடந்த வாரம் இத்தாலியில் நடைபெற்ற நிகழ்வொன்றில் பிரித்தானியப் பிரதமர் தெரேசா மே ஆற்றிய உரையின் பின்னர் நடைபெறும் இந்தப் பேச்சுவார்த்தை முக்கியமானதாகக் கருதப்படுகின்றது என, அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இதேவேளை, இந்தப் பேச்சுவார்த்தையின்போது மேலதிக விபரங்களை ஐரோப்பிய ஒன்றியப் பேச்சாளர்கள் எதிர்பார்த்துள்ளார்கள் என்பதுடன், பிரெக்சிற் விவகாரத்தில் முன்னேற்றங்கள் காணப்பட வேண்டும் எனவும் ஐரோப்பிய ஒன்றியத்துக்கான பிரதான பேச்சாளர் மைக்கேல் பார்னியார் கூறியுள்ளார்.

மேலும், பிரெக்சிற் விவகாரம் தொடர்பில் அடுத்த மாதம் நடைபெறவுள்ள பேச்சுவார்த்தையின்போது குடிமக்களின் உரிமை, அயர்லாந்து எல்லைப் பிரச்சினை, பிரிவதற்கான சட்டமூலம் அல்லது நிதிப் பிரச்சினை உட்பட பல்வேறு விடயங்கள் தொடர்பான பேச்சுவார்த்தையை நடத்துவதற்கு ஐரோப்பிய ஒன்றியத் தலைவர்கள் தீர்மானித்துள்ளனர் என, அதிகாரிகள் கூறியுள்ளனர்.

Banner
toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg