Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

பொதுத் தேர்தலை தொகுதி வாரியாக நடத்த நடவடிக்கை!

In இலங்கை
Updated: 07:37 GMT, Sep 25, 2017 | Published: 07:37 GMT, Sep 25, 2017 |
0 Comments
1202
This post was written by : Anojkiyan

எதிர்வரும் பொதுத் தேர்தலை தொகுதி வாரியாக நடத்துவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் பொதுச் செயலாளர் துமிந்த திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.

கட்சியின் அனுராதபுரம் பிரதான அலுவலகத்தில் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துக்கொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே இதனைக் குறிப்பிட்டார். இதன்போது அவர் மேலும் கூறுகையில்,

“தொகுதிவாரி முறையில் உள்ளுராட்சிமன்ற தேர்தலை நடத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் மக்களுக்கு தொகுதிக்கு ஒரு பிரதிநிதியை பெற்றுக்கொள்ள முடியும். இதன்மூலம் மக்களின் கருத்துக்களை நேரடியாக தேசிய மட்டத்திற்கு கொண்டு செல்லும் மக்கள் பிரதிநிதித்துவம் உருவாகும்.

இதற்கு ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியை பிரதிநிதித்துவப்படுத்தும் சிலரை தவிர, அனைத்து கட்சிகளையும் சேர்ந்த மக்கள் பிரிதிநிதிகள் ஆதரவு தெரிவித்துள்ளனர். இந்த நிலையில் தற்போது மாகாண சபை தேர்தலையும், தொகுதிவாரி பிரதிநிதித்துவ முறையில் நடத்துவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன” என கூறினார்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg