Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

பட்டதாரிகளுக்கு மட்டும் வேலை வழங்கக்கூடாது: குருகுலசிங்கம்

In இலங்கை
Published: 07:43 GMT, Sep 25, 2017 |
0 Comments
1451
This post was written by : Ravivarman
aaa

நல்லாட்சி அரசாங்கம் பட்டதாரிகளுக்கு மட்டும் வேலை வழங்குவதுடன் மட்டும் நின்றுவிடாது கீழ் நிலைத் தொழிலாளர்களையும் கவனத்தில் கொள்ள வேண்டும் என கட்டுமுறிவு விவசாயிகள் சங்கச் செயலாளர் ரீ.ஜீ. குருகுலசிங்கம் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக இன்று (திங்கட்கிழமை) ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கையிலேயே இதனைக் குறிப்பிட்டுள்ளார். இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்,

“கல்வியில் சாதாரண தரம், மற்றும் உயர் தரம் படித்து சித்தியடைந்தவர்களும் சித்தியடையாதவர்களும் அதற்குக் கீழ் நிலையில் உள்ளவர்களும் எனப் பல்லாயிரம் மனித உழைப்பாளிகள் உள்ளார்கள்.

இவர்களது மனித வளத்தையும் இந்த நாடு பயன்படுத்திக் கொள்ள வேண்டும். கீழ் நிலைத் தொழிலாளர்களுக்கான தொழிற்சாலைகள் உருவாக்கப்பட வேண்டும்.

குறிப்பாக விவசாயம், மீன்பிடி, கட்டட நிர்மாணம், போன்ற கைத்தொழில்களைக் கொண்ட எத்தனையோ வளங்களைப் பயன்படுத்தித் தொழிற்சாலைகளை உருவாக்க முடியும்.

பட்டதாரிகளுக்கு மட்டும்தான் வேலைவாய்ப்பு என்று திட்டங்களை வகுக்காது மற்றைய தொழிலாளர்களின் வாழ்க்கை நிலை குறித்தும் எல்லோரும் சிந்திக்க வேண்டும்” என ரீ.ஜீ. குருகுலசிங்கம் தெரிவித்துள்ளார்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg