Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site
தலைப்பு செய்திகள்

மாரி -2 இல் தனுஷிற்கு வில்லன் யார் தெரியுமா?

In சினிமா
Updated: 07:52 GMT, Sep 25, 2017 | Published: 07:52 GMT, Sep 25, 2017 |
0 Comments
1215
icon_com
This post was written by : Kemasiya
fhgthgt

தனுஷின் மாரி-2 படத்தில் வில்லனா மலையாள சினிமாவில் வளர்ந்து வரும் நடிகர் டோவினோ தோமஸ் நடிக்கவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

தனுஷ் நடிப்பில் கடந்த 2015ஆம் ஆண்டு வெளியாகி வரவேற்பை பெற்ற படம் மாரி. இப் படத்தின் இரண்டாம் பாகத்தை தனுஷின் வுண்டர்பார் பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்கவுள்ளது.

இந்த நிலையில் மாரி-பாம் இரண்டில் வில்லனாக டோவினோ தோமஸ் நடிக்கவுள்ளதாக இயக்குனர் பாலாஜி தனது டுவிட்டரில் தெரிவித்துள்ளார்.

பாலாஜி மோகனின் இயக்கத்தில் வெளிவந்த மாரி-பாகம் 1 இல் தனுஷ், விஜய் யேசுதாஸ், காஜல் அகர்வால் முன்னணி கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர். மாரி படத்திற்கு கிடைத்த வரவேற்பை தொடர்ந்து சமீபத்தில் மாரி-2 படத்திற்கான வேலைகளை பாலாஜி மோகன் தொடங்கினார்.

ஏற்கனவே டோவினோ தோமஸ் தனுஷின் வுண்டர்பார் பிலிம்ஸ் பேனரில் ஹதரங்கம்’ மற்றும் ஹமரடோனா’ படங்களில் நடித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg