Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

ஜேர்மனியில் தேர்தல்: நான்காவது தடவையாகவும் வெற்றி பெற்றார் அங்கேலா மெர்கல்

In ஐரோப்பா
Published: 07:41 GMT, Sep 25, 2017 |
0 Comments
1271
icon_com
This post was written by : Suganthini

ஜேர்மனியில் நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலில் அதிபர் வேட்பாளராக கிறிஸ்தவ ஜனநாயக யூனியன் கட்சியின் சார்பில் போட்டியிட்ட அங்கேலா மெர்கல், நான்காவது தடவையாகவும் வெற்றி பெற்றுள்ளார்.

அங்கேலா மெர்கல் 33.2 சதவீதமான வாக்குகளைப் பெற்று வெற்றி பெற்றுள்ளார்.  இதேவேளை, சமூக ஜனநாயக கட்சியின் சார்பில் போட்டியிட்ட மார்டின் ஷுல்ஸ் 20.8 சதவீதமான வாக்குகளைப் பெற்றுள்ளார்.

ஜேர்மனியில் தற்போதைய அரசாங்கத்தின் பதவிக்காலம் முடிவடையவுள்ள நிலையில், புதிய அதிபரைத் தெரிவுசெய்வதற்கான 19ஆவது நாடமாளுமன்றத் தேர்தல் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) நடைபெற்றது.

இந்தத் தேர்தலில் அதிபர் வேட்பாளராக கிறிஸ்தவ ஜனநாயக யூனியன் சார்பில் தற்போதைய அதிபரான அங்கேலா மெர்கலும், சமூக ஜனநாயகக் கட்சியின் சார்பில் மார்டின் ஷுல்ஸும் போட்டியிட்டனர். இவர்களைத் தவிர, இன்னும் 5 பேர் தேர்தலில் போட்டியிட்டுள்ளனர்.

அத்துடன், இந்தத் தேர்தலில் வாக்களிப்பதற்காக 61.5 மில்லியன் மக்கள் தகுதி பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg