Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

பிரெக்சிற் விவகாரம் தொடர்பில் அயர்லாந்து பிரதமருடன் கலந்துரையாடல்

In
Published: 09:13 GMT, Sep 25, 2017 |
0 Comments
1168
This post was written by : Suganthini
therasa

பிரெக்சிற் விவகாரம் தொடர்பில் பிரித்தானியப் பிரதமர் தெரேசா மேயும் அயர்லாந்து பிரதமர் லியோ வரட்கரும் லண்டனில் சந்தித்து கலந்துரையாடியுள்ளனர்.

அத்துடன், இந்தச் சந்திப்பின்போது வட அயர்லாந்தின் அரசியல் நிலைவரம் தொடர்பிலும் இவர்கள் இருவரும் கலந்துரையாடியுள்ளனர் என, அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இரண்டு வருடகாலத்துக்கு பிரித்தானியாவுடன் வர்த்தக உறவை நீடிக்குமாறு ஐரோப்பிய ஒன்றியத்திடம் கோரிக்கை விடுத்திருந்தமைக்கு அயர்லாந்துப் பிரதமர் வரவேற்புத் தெரித்துள்ளார்.

இது சரியான முடிவாகும் எனவும் அயர்லாந்துப் பிரதமர் கூறியுள்ளார்.

கடந்த வாரம் இத்தாலியில் நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றியிருந்த பிரித்தானியப் பிரதமர் தெரேசா மே, இரண்டு வருடகாலத்துக்கு பிரித்தானியாவுடன் வர்த்தக உறவை நீடிக்குமாறு கோரிக்கை விடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg