Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site
தலைப்பு செய்திகள்

பாண்ட்யாவின் அதிரடியை கண்டு வியப்பில் ஆழ்ந்த சங்கா: டுவிட்டரில் நெகிழ்ச்சி

In கிாிக்கட்
Published: 10:03 GMT, Sep 25, 2017 |
0 Comments
3390
icon_com
This post was written by : Anojkiyan
har

அவுஸ்ரேலிய அணிக்கெதிரான மூன்றாவது ஒருநாள் போட்டியில், அதிரடி காட்டிய இந்திய அணியின் இளம் சகலதுறை வீரரான ஹர்திக் பாண்ட்யாவுக்கு இலங்கை அணியின் முன்னாள் அணித்தலைவரும் நட்சத்திர வீரருமான குமார் சங்ககார வாழ்த்து தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் தனது உத்தியோகபூர்வ டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது, “இந்திய அணி குதிரை பாய்ச்சலில் தொடரை கைப்பற்றியுள்ளது, ஹர்திக் பாண்ட்யா சிறப்பான வீரராக உள்ளார்.எல்லா சூழ்நிலைகளுக்கும் ஏற்ற அணியாக இந்தியா உள்ளது” என பதிவிட்டுள்ளார்.

இதற்கு பதிலளித்துள்ள ஹர்திக் பாண்ட்யா, “உங்களுடைய அன்புள்ள வார்த்தைக்கு நன்றி” என கூறியுள்ளார்.

நேற்று (ஞாயிற்றுக்கிழமை) இந்தூரில் நடைபெற்ற இப்போட்டியில், 72 பந்துகளில் 4 சிக்ஸர்கள் மற்றும் 5 பவுண்ரிகள் அடங்களாக 78 ஓட்டங்கள் குவித்து போட்டியின் வெற்றிக்கு துணை நின்றதோடு போட்டியின் ஆட்டநாயகனாகவும் தெரிவுசெய்யப்பட்டார்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg