Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site
தலைப்பு செய்திகள்

லண்டன் குண்டு வெடிப்பு: ஏழாவது சந்தேக நபர் கைது

In
Updated: 14:21 GMT, Sep 25, 2017 | Published: 10:57 GMT, Sep 25, 2017 |
0 Comments
1131
icon_com
This post was written by : Suganthini
uk

லண்டன், பார்சன்ஸ்கிறீன்  நிலக்கீழ் ரயில் நிலையத்தில் இடம்பெற்ற குண்டுவெடிப்புச் சம்பவம் தொடர்பில் ஏழாவது சந்தேகநபர் ஸ்கொட்லாந்தில் இன்று (திங்கட்கிழமை) காலை பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

பார்சன்ஸ்கிறீன்  நிலக்கீழ் ரயில் நிலையத்தில் கடந்த 15ஆம் திகதி இடம்பெற்ற குண்டு வெடிப்பில் 30 பேர் காயமடைந்த நிலையில் தொடா் விசாரணைகளை மேற்கொண்டுவந்த பொலிஸார், ஏற்கெனவே 6 பேரைக் கைதுசெய்து விசாரணையை முன்னெடுத்திருந்தனர்.

இவர்களில் மூவர்மீது எந்தவித குற்றச்சாட்டும் நிரூபிக்கப்படாத நிலையில் விடுவிக்கப்பட்டுள்ளனர். ஏனைய மூவரும் பொலிஸாரின் பாதுகாப்பில் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில், 20 வயதுடைய ஏழாவது சந்தேகநபர் கைதுசெய்யப்பட்டுள்ளார் எனவும் பயங்கரவாதக் குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் இந்தச் சந்தேகநபர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளனர் எனவும் பொலிஸார் கூறியுள்ளனர்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg