Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

சங்கக்காரவிற்கு இங்கிலாந்தின் ஐந்து உயரிய விருதுகள்!

In கிாிக்கட்
Updated: 11:25 GMT, Sep 25, 2017 | Published: 11:10 GMT, Sep 25, 2017 |
0 Comments
3648
This post was written by : Surenth

முதல் தர கிரிக்கெட் போட்டிகளிலிருந்து ஓய்வு பெறவுள்ள துடுப்பாட்ட ஜாம்பவான் குமார் சங்கக்கார ஐந்து உயரிய விருதுகள் வழங்கி கௌரவிக்கப்பட்டுள்ளார்.

இங்கிலாந்தின் பிராந்திய கழகங்களுக்கிடையிலான 2017 பருவகால கிரிக்கெட் தொடா் இறுதிக் கட்டத்தை அடைந்துள்ள நிலையில்,  பருவ காலத்திற்கான விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.  குறித்த விருதுகளில் குமாா் சங்கக்கார ஐந்து விருதுகளை தனதாக்கியுள்ளாா்.

இதன்படி, ஆண்டுக்கான சிறந்த வீரர், ஆண்டுக்கான உறுப்பினர் தெரிவில் சிறந்த வீரர், சில்வஸ்டர் கிளார்க் லார்ஜ் ரம் முமன்ட்த்துக்கான விருது, கியா (Kia) ஆண்டுக்கான சிறந்து துடுப்பாட்ட வீரருக்கான விருது மற்றும் வீரர்களின் ஆண்டுக்கான சிறந்த வீரர் ஆகிய ஐந்து விருதுகள் வழங்கப்பட்டுள்ளன.

39வயதான குமார் சங்கக்கராவுக்கு, சாரே கழகத்தின் தலைவர் ரிச்சர்ட் தொம்சனினால் வாழ்நாள் உறுப்பினருக்கான கிண்ணம் ஒன்றும் வழங்கி கௌரவிக்கபட்டுள்ளார்.

இதேவேளை, இளையோருக்கான சிறந்த வீரர் விருது 19வயதான அவுஸ்ரேலிய அணியின் போப்புக்கு வழங்கப்பட்டுள்ளது. ஆண்டுக்கான சிறந்த பந்து வீச்சாளர் விருது டோம் கரன்னுக்கு வழங்கப்பட்டுள்ளது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg