Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site
தலைப்பு செய்திகள்

அரச உடமைகளை திருப்பி ஒப்படைத்த மாகாண சபை உறுப்பினருக்குப் பாராட்டு!

In இலங்கை
Published: 11:37 GMT, Sep 25, 2017 |
0 Comments
1244
icon_com
This post was written by : Ravivarman
vlcsnap-2017-09-25-14h24m20s917

கிழக்கு மாகாண சபை கலைக்கப்படுவதற்கு சில தினங்களுக்கு முன்னரே தன்னிடமுள்ள அரச உடமைகளைத் திருப்பி ஒப்படைப்பதில் அம்மாகாண சபை உறுப்பினர் ஷிப்லி பாறூக் சிறந்த முன்மாதிரியைக் காட்டியுள்ளதாக தவிசாளர் சந்திரதாஸ கலப்பத்தி பாராட்டியுள்ளார்.

கிழக்கு மாகாண சபையின் 85வதும் இறுதியுமான அமர்வு இன்று (திங்கட்கிழமை) கிழக்கு மாகாண சபையின் தவிசாளர் சந்திரதாஸ கலப்பத்தி தலைமையில் நடைபெற்றது.

இதன்போதே கிழக்கு மாகாண சபை உறுப்பினர் ஷிப்லி பாறூக் மாகாண சபையினால் செலவு செய்யப்பட்ட தொகை அடங்கலாக 67,428.40 ரூபாய்க்கான காசோலை, மற்றும் தனது அலுவலக நடவடிக்கைகளுக்கென வழங்கி வைக்கப்பட்ட அலுவலக பொருட்களையும் கிழக்கு மாகாண சபையின் பேரவைச் செயலாளர் எம்.சீ.எம். செரீப் முன்னிலையில் கிழக்கு மாகாண சபையின் தவிசாளரிடம் கையளித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

DSC_1829 (Medium) DSC_1821 (Medium)

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg