Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site
தலைப்பு செய்திகள்

வீடமைப்புக்கான நிதியுதவி வழங்கும் நிகழ்வு!

In இலங்கை
Published: 16:53 GMT, Sep 25, 2017 |
0 Comments
1166
icon_com
This post was written by : Ravivarman
IMG_2310

கிழக்கு மாகாண முதலமைச்சர் ஹாபிஸ் நசீர் அஹமட்டின் அமைச்சின் கீழுள்ள வீடமைப்பு அதிகார சபையின் மூலம் வீடுகளற்றவர்களுக்கு மானிய அடிப்படையிலான நிதியுதவி வழங்கும் நிகழ்வு இன்று (திங்கட்கிழமை) காலை கிழக்கு மாகாண முதலமைச்சரின் செயலகத்தில் இடம்பெற்றது.

முதலமைச்சின் செயலாளர் யூ.எல்.ஏ.அஸீஸ் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் முதலமைச்சர் ஹாபிஸ் நசீர் அஹமட் குறித்த பயனாளிகளுக்கான காசோலைகளை வழங்கிவைத்தார்.

இதில் அம்பாறை, மட்டக்களப்பு, திருகோணலை ஆகிய மூன்று மாவட்டங்களில் இருந்து 66 பயனாளிகள் காசோலைகளைப் பெற்றுக்கொண்டனர்.

இந்நிகழ்வில் வீதி அபிவிருத்தி அமைச்சர் ஆரியபதி கலபதி, சுகாதார அமைச்சர் ஏ.எல்.எம்.நசீர், சபைத் தவிசாளர் சந்திரதாச கலபதி, மாகாணசபை உறுப்பினர்களான கே.எம்.ரஷாக் ஜவாத், ஐ.எல்.மாஹீர், ஏ.எல்.தவம், மெத்தானந்த சில்வா, மஞ்சுள பெர்ணாண்டோ, அருண சிறிசேன ஆகியோருடன் வீடமைப்பு அதிகார சபை தவிசாளர் கே.எல்.ஹமீட் மற்றும் அரச அதிகாரிகள் பலரும் கலந்து கொண்டனர்.

IMG_2313

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg