Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site
தலைப்பு செய்திகள்

ரோஹிங்கியர்களுக்கு எதிராக இன அழிப்பு: ஐ.நா.வின் குற்றச்சாட்டை மறுத்துள்ள மியன்மார்

In உலகம்
Published: 04:11 GMT, Sep 26, 2017 |
0 Comments
1211
icon_com
This post was written by : Suganthini

மியன்மாரில் ரோஹிங்கியா முஸ்லிம்களுக்கு எதிராக இன அழிப்பு முன்னெடுக்கப்படவில்லை என, ஐக்கிய நாடுகள் சபையின் மியன்மாருக்கான தூதுவர் ஹவ் டூ சூன் (Hau Do Suan)  தெரிவித்துள்ளார்.

ரோஹிங்கியா முஸ்லிம்களுக்கு எதிராக இன அழிப்பு முன்னெடுக்கப்படுவதாக ஐ.நா. குற்றஞ்சாட்டியிருந்தது.

ஐ.நா. பொதுச் சபைக் கூட்டத்தில் நேற்று (திங்கட்கிழமை) கலந்துகொண்ட அவர், ஐ.நா.வின் குற்றச்சாட்டுக்குப் பதிலளித்து உரையாற்றியபோதே, மேற்கண்டவாறு கூறியுள்ளார்.

அங்கு மேலும் உரையாற்றிய அவர், ‘மியன்மாரிலுள்ள ரோஹிங்கியா முஸ்லிம்களுக்கு எதிராக இன அழிப்போ, படுகொலையோ அல்லது அவர்களை துன்புறுத்தும் செயற்பாடுகளோ முன்னெடுக்கப்படவில்லை.

ஆனால், அங்கு பயங்கரவாதிகளுக்கு எதிரான மோதல் இடம்பெற்று வருகின்றது’ என்றார்.

‘பயங்கரவாதத்துக்கு எதிராகப் போராடுவதும் அப்பாவி மக்களை பாதுகாப்பதுமே பொறுப்புவாய்ந்த அரசாங்கத்தின் முக்கிய பணியாகும்.

‘எனவே, மனித உரிமைகள், சுதந்திரம் உள்ளிட்ட கொள்கைகளுக்காக போராடும் மியன்மார் தலைவர்கள், இவ்வாறான செயற்பாடுகளில் ஈடுபட மாட்டார்கள்’ எனவும் அவர் கூறியுள்ளார்.

‘மேலும், மியன்மாரில் இனப்படுகொலையோ அல்லது இன அழிப்போ இடம்பெறுவதாகக் கூறப்பட்டிருந்தால், அவற்றை தடுப்பதற்கு எந்தவித நடவடிக்கையையும் நாம் முன்னெடுப்போம்’ எனவும் அவர் கூறியுள்ளார்.

மியன்மாரின் ராஹினி மாநிலத்தில் இடம்பெற்றுவரும் வன்முறை காரணமாக, ரோஹிங்கியா முஸ்லிம்கள் பலர் உயிரிழந்துள்ளனர். இதேவேளை, பலர் அயல் நாடானா பங்களாதேஷில்  அடைக்கலம் கோரியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg