Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

வடகொரியாவின் குற்றச்சாட்டை நிராகரித்துள்ள அமெரிக்கா

In உலகம்
Published: 05:48 GMT, Sep 26, 2017 |
0 Comments
1187
This post was written by : Suganthini
white

வடகொரியா மீது அமெரிக்கா போர்ப் பிரகடனம் செய்துள்ளதாக வடகொரியாவால் முன்வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டை அமெரிக்கா நிராகரித்துள்ளது.

வடகொரியாவானது ஆத்திரமூட்டும் செயற்பாடுகளை கைவிட வேண்டும் எனவும் வெள்ளை மாளிகையின் பேச்சாளர் சாரா ஹக்கபி சண்டர்ஸ்  (Sarah Huckabee Sanders)  எச்சரித்துள்ளார்.

வடகொரியாவின் இந்த செயற்பாடு, அமெரிக்கா மீதான வீண் குற்றச்சாட்டு எனவும் அவர் கூறியுள்ளார்.

தனது நாட்டின் மீது அமெரிக்க ஜனாதிபதி டொனல்ட் ட்ரம்ப் போர்ப் பிரகடனம் செய்துள்ளதாகக் குற்றஞ்சாட்டியுள்ள வடகொரியா, தம்மை அச்சுறுத்தும் வகையில் மீண்டும் அமெரிக்கப் போர் விமானங்கள் தமது வான்பரப்பு எல்லையில் பறக்குமானால் அவை சுட்டு விழுத்தப்படும் எனவும் எச்சரித்திருந்தார்.

இதனை அடுத்து, வெள்ளை மாளிகையின் பேச்சாளர், வடகொரியா மீதான தனது கண்டனத்தை வெளியிட்டுள்ளார்.

இதேவேளை கருத்துத் தெரிவித்த பென்டகன் பேச்சாளர், ‘வடகொரியாவானது ஆத்திரமூட்டும் செயற்பாடுகளை கைவிடாவிடின், வடகொரியாவைக் கையாள்வதற்கான தமது விருப்பத்தை அமெரிக்க ஜனாதிபதியிடம் முன்வைப்போம்’ எனக் கூறியுள்ளார்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg