Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

கோஹ்லியின் பெருந்தன்மை! – இந்திய அணியில் இரு தலைவர்கள்

In கிாிக்கட்
Updated: 06:06 GMT, Sep 26, 2017 | Published: 06:06 GMT, Sep 26, 2017 |
0 Comments
3620
This post was written by : Puvanes

இந்திய அணியில் தற்போது இரு தலைவர்கள் உள்ளனர் என அவுஸ்ரேலியாவின் அதிரடி வீரரான டேவிட் வோர்னர் தெரிவித்துள்ளார்.

அவரின் குறித்த கருத்துகளைத் தொடர்ந்து, இந்திய அணியின் தொடர் வெற்றிகளுக்கு, தற்போதைய தலைவர் கோஹ்லியை விடவும் முன்னாள் தலைவர் தோனியின் பங்களிப்பே அதிகம் என கிரிக்கெட் விமர்சகர்கள் தெரிவித்துள்ளனர்.

இந்திய அணியின் சுழல்பந்து வீச்சாளர்களுக்கு தோனியே ஆலோசனை வழங்கி வருவதாகவும் தெரிவிக்கப்படுவதோடு, “நான் சிறப்பான முறையில் ஹட்ரிக் விக்கெட்டுகளை வீழ்த்த தோனி வழங்கிய ஆலோசனையே காரணம்” என குல்தீப் யாதவ் கூறியுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

தற்போதைய தலைவர் விராட் கோஹ்லியும் பெருந்தன்மையோடு நடந்து கொள்வதாகவும், தோனியின் ஆலோசனைகளுக்கு மதிப்பளித்து கோஹ்லியும் விளையாடுவதாக குறிப்பிடப்படுகின்றது.

அண்மைய அவுஸ்ரேலியாவிற்கு எதிரான ஒரு நாள் போட்டியில் போது விராட் கோஹ்லி பவுன்டரி எல்லைக் கோட்டுக்கு அருகே சென்று களத்தடுப்பில் ஈடுபட்டிருந்தார்.

குறித்த விடயத்தை சுட்டிக்காட்டும் கிரிக்கெட் விமர்சகர்கள் “தோனி ஆலோசனை வழங்க இருக்கும் தைரியத்திலேயே விராட் களத்தடுப்பிற்கு எல்லைக் கோட்டுக்கு அருகே சென்றுள்ளார் எனத் தெரிவித்துள்ளனர்.

தற்போதைய இந்திய அணியில் இரு வெவ்வேறு துருவங்களான விராட் மற்றும், தோனி இணைந்து தலைவர் பொறுப்புகளை கவனித்து அணியை வழிநடத்திச் செல்கின்றமையே இந்திய அணி, தொடர்ந்தும் வெற்றிகளை குவித்து வருகின்றது என குறிப்பிடப்படுகின்றது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg