Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site
தலைப்பு செய்திகள்

அன்று மௌனம் காத்த வல்லரசுகள் இன்றும் அதே போக்கில்!

In இலங்கை
Updated: 11:02 GMT, Sep 26, 2017 | Published: 06:16 GMT, Sep 26, 2017 |
0 Comments
1215
icon_com
This post was written by : Kalavarshny Kanagaratnam
srilanka

தமிழ் மக்கள் உரிமைகளுடன் தாயக மண்ணில் தலைநிமிர்ந்து வாழ்வதை உறுதிசெய்வதற்காய் உண்ணா நோன்பிருந்து உயிர்நீத்த, விடுதலைப் புலிகளின் யாழ். பிராந்திய முன்னாள் அரசியல்துறை பொறுப்பாளர் தியாகி திலீபனின் 30ஆவது ஆண்டு நினைவுதினம் இன்றாகும்.

பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் தடுப்புக் காவலில் உள்ளோர் விடுவிக்கப்பட வேண்டும், புனர்வாழ்வு என்ற பெயரில் தமிழர் தாயகத்தில் நடத்தப்படும் சிங்களக் குடியேற்றங்கள் உடனடியாக நிறுத்தப்பட வேண்டும், இடைக்கால அரசு நிறுவப்படும் வரை ‘புனர்வாழ்வு’ என்று அழைக்கப்படும் சகல வேலைகளும் நிறுத்தப்பட வேண்டும், வடக்கு – கிழக்கு மாகாணங்களில் பொலிஸ் நிலையங்கள் திறக்கப்படுவது உடனடியாக நிறுத்தப்பட வேண்டும், இந்திய அமைதிப்படையின் மேற்பார்வையில் ஊர்காவற்படை என அழைக்கப்படுவோருக்கு வழங்கப்பெற்ற ஆயுதங்கள் திரும்பப் பெறப்பட்டு தமிழ் கிராமங்கள் பாடசாலைகள் ஆகியவற்றில் குடிகொண்டுள்ள இராணுவ, பொலிஸ் நிலையங்கள் மூடப்பட வேண்டும் என்ற ஐந்து அம்சக் கோரிக்கைகளை முன்வைத்து, கடந்த 1987ஆம் ஆண்டு செப்டெம்பர் மாதம் 13ஆம் திகதி திலீபன் தன் போராட்டத்தை ஆரம்பித்தார்.

ஈழத் தமிழ் மக்கள் சார்பிலான குறித்த கோரிக்கைகள் இந்திய உயர்ஸ்தானிகருக்கு அனுப்பப்பட்டு 24 மணித்தியாலய அவகாசமும் வழங்கப்பட்டிருந்த நிலையில், செப்டெம்பர் 15ஆம் திகதிவரை எவ்வித பதிலும் கிடைக்கவில்லை. அன்றிலிருந்து உண்ணாவிரத போராட்டமாக உருவெடுத்த திலீபனின் போராட்டம் தொடர்பில் சர்வதேசமும் மௌனம் காக்க, இதே நாளில் தமிழ் மக்களுக்காய் தனது உயிரை தியாகம் செய்தார் திலீபன்.

எம்மைப் போன்று எதிர்கால சந்ததியும் துன்பியல் வாழ்க்கைக்குள் சென்றுவிடக் கூடாதென்பதற்காகவும், எதிர்கால சந்ததி வாழ ஒரு நாடு தேவை என்பதற்காகவும் மக்கள் கிளர்ந்தெழ வேண்டுமென, திலீபன் தனது இறுதி உரையில் கூறியிருந்தார். அதற்கு பின்னர் மக்கள் போராட்டம் வீறுகொண்டு எழுவதற்கு அடித்தளமாய், திலீபனின் போராட்டமே அமைந்திருந்தது.

அன்றைய போராட்டத்தை எவ்வாறு அரசாங்கமும் சர்வதேசமும் கண்டுகொள்ளாமல் இருந்ததோ, அதே போக்கு மூன்று தசாப்தங்களைக் கடந்து இன்றும் நீடிப்பது தமிழர்களுக்கு சாபக்கேடு. இன்றும் தமிழ் மக்கள் தமது உரிமைகளுக்காய் மாதக்கணக்கில் வீதிகளில் போராடி வருகின்ற நிலையில், அவற்றிற்கான தீர்வு எட்டாக்கனியாகவே உள்ளது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg