Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

ஆரோக்கியமற்ற உணவுப் பொருட்களின் இறக்குமதிக்குத் தடை!

In இலங்கை
Updated: 06:50 GMT, Sep 26, 2017 | Published: 06:50 GMT, Sep 26, 2017 |
0 Comments
1206
This post was written by : Ravivarman

உடல் ஆரோக்கியத்திற்கு பாதிப்பை ஏற்படுத்தும் அனைத்து உணவுப் பொருட்களின் இறக்குமதியையும் தடைசெய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன தெரிவித்தார்.

களுத்துறை போம்புவல சேவைக்கால பயிற்சி நிறுவனத்தின் விவசாய கண்காட்சியை நேற்றையதினம் (திங்கட்கிழமை) ஆரம்பித்து வைத்து உரையாற்றும்போதே ஜனாதிபதி இதனைத் தெரிவித்தார். இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்,

“தேசிய பொருளாதார பேரவை ஊடாக மேற்படி நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படவுள்ளன. அத்தியாவசியமான உணவுப் பொருட்கள் இறக்குமதிக்கு மட்டும் 2500 கோடிக்குக் கூடுதலான பணம் செலவிடப்படுகின்றது.

நாட்டின் பண்பாட்டையும் தனித்துவத்தையும் பாதுகாத்து எமக்குத் தேவையான உணவுப் பொருட்களை எமது நாட்டிலேயே உற்பத்தி செய்ய வேண்டியது அவசியமாகும்.

உள்நாட்டு விவசாயிகளின் உற்பத்திகளுக்குச் சிறந்த விலையை வழங்கி அவர்களது பொருளாதாரத்தையும் நாட்டின் பொருளாதாரத்தையும் பலப்படுத்த வேண்டுமாயின் எமது பொருட்களுக்கு கூடுதல் பெறுமதியினை வழங்க வேண்டும்” என என ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன தெரிவித்தார்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg