Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

மர்மப்பொருள் மீட்பு: தடவியல் பரிசோதனைக்கு அனுப்பிவைப்பு

In
Updated: 06:59 GMT, Sep 26, 2017 | Published: 06:57 GMT, Sep 26, 2017 |
0 Comments
1221
This post was written by : Suganthini
uk11

பிரித்தானியா, மேற்கு பெல்பாஸ்ட் பகுதியில் மீட்கப்பட்டுள்ள மர்மப்பொருள் ஒன்று தடவியல் பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

மேற்கு பெல்பாஸ்ட் பகுதியில் நேற்று (திங்கட்கிழமை) பகல் திடீரென மர்மப் பொருளொன்று காணப்பட்டுள்ளதைத் தொடர்ந்து, அங்கு பாதுகாப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டது.

இதனை அடுத்து, அப்பகுதியில் வசிக்கும் மக்கள் பாதுகாப்பைக் கவனத்திற்கொண்டு அங்கிருந்து வெளியேற்றப்பட்டதுடன், மர்மப் பொருளும் அங்கிருந்து மீட்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், அப்பகுதியில் விடுக்கப்பட்ட பாதுகாப்பு எச்சரிக்கை தற்போது தளர்த்தப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் கூறியுள்ளனர்.

லண்டன், பார்சன்கிறீன் நிலக்கீழ் ரயில் நிலையத்தில் அண்மையில் இடம்பெற்ற குண்டு வெடிப்புச் சம்பவத்தை தொடர்ந்து, அங்கு பாதுகாப்பு நடவடிக்கைகள் பலப்படுத்தப்பட்டுள்ளன.

இந்நிலையில்இ சந்தேகத்துக்கிடமான பொருட்கள் காணப்படுமிடத்துஇ அவை தொடர்பில் தமக்கு அறிவிக்குமாறும் பொதுமக்களிடம் பொலிஸார் வேண்டுகோள் விடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg