Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

வியப்பில் ஆழ்த்திய சச்சின்! – வைரலாகும் புகைப்படங்கள்

In கிாிக்கட்
Updated: 07:19 GMT, Sep 26, 2017 | Published: 07:19 GMT, Sep 26, 2017 |
0 Comments
1622
This post was written by : Puvanes

கிரிக்கெட் உலகின் ஜாம்பவானான சச்சின் டெண்டுல்கர் மும்பை பந்த்ரா பகுதியில் குப்பைகளை அள்ளி சுத்திகரிப்பு நடவடிக்கையினை மேற்கொண்டுள்ளார்.

தூய்மையே சேவை என்ற பிரச்சார திட்டத்தின் கீழேயே சச்சின் இந்த செயற்பாட்டினை இன்று அதிகாலை மேற்கொண்டுள்ளார்.

பாரதப்பிரதமராக மோடி பதவியேற்றதன் பின்னர் தூய்மையான இந்தியா என்ற திட்டத்தினை கொண்டு வந்தார். இந்த  திட்டத்திற்காக நாட்டின் பல்வேறு துறைகளின்  பிரபலங்கள் தூதுவர்களாக நியமிக்கப்பட்டனர்.

குறித்த திட்டத்தின் ஒரு பகுதியாக மக்களுக்கு விழிப்புணர்வினை ஏற்படுத்தும் முகமாக தெருக்களை சுத்தப்படுத்திய சச்சினோடு ஏராளமான பொதுமக்களும் இணைந்து கொண்டு சுத்திகரிப்பில் ஈடுபட்டுள்ளனர்.

இதன்போது, “இந்தியாவை சுத்தமாக வைத்திருக்க நாம் ஒவ்வொருவரும் உறுதி கொள்ள வேண்டும். அதனால், உங்களது நண்பர்களுடன் ஒன்றிணையுங்கள். இந்தியாவை சுத்தமாக வைத்துக் கொள்ளுங்கள்” என சச்சின் குறிப்பிட்டுள்ளார்.

கிரிக்கெட் உலகில் பல்வேறு சாதனைகளை படைத்துள்ள சச்சின் வீதியில் குப்பை அள்ளும் புகைப்படங்கள் சமூகவலைத்தளங்களில் வைரலாக பரவி வருவதோடு, பல்வேறு தரப்பினரும் பாராட்டுக்களை தெரிவித்து வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.

sachin001

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg