Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site
தலைப்பு செய்திகள்

அணுவாயுத விவகாரம் தொடர்பில் சுமூகமாக தீர்வு காணப்பட வேண்டும் – தெரேசா

In
Updated: 08:27 GMT, Sep 26, 2017 | Published: 08:02 GMT, Sep 26, 2017 |
0 Comments
1098
icon_com
This post was written by : Suganthini
therasa

வடகொரியாவின் அணுவாயுத விவகாரம் தொடர்பில் சுமூகமான முறையில் தீர்வு காண விரும்புவதாக பிரித்தானியப் பிரதமர் தெரேசா மே தெரிவித்துள்ளார்.

பிரித்தானியாவுக்கும் சீனாவுக்கு இருதரப்பு உறவு ஏற்படுத்தப்பட்டு 45ஆவது வருட பூர்த்தியாகின்றது.

இந்நிலையில் பிரித்தானியப் பிரதமர் தெரேசா மேயை, நேற்று (திங்கட்கிழமை) தொலைபேசியில் தொடர்புகொண்டு சீன ஜனாதிபதி ஸி ஜின்பிங் கலந்துரையாடியுள்ளார்.

இதன்போது, கொரிய தீபகற்பம் மீதான பதற்ற நிலைமை தொடர்பில் இவர்கள் இருவரும் கலந்துரையாடியபோதே, பிரித்தானியப் பிரதமர் மேற்கண்டவாறு கூறியுள்ளார்.

மேலும், பிராந்திய மற்றும் சர்வதேசத்தின் ஸ்திரத்தன்மை மற்றும் சமாதானத்தை பாதுகாப்பதில் பிரித்தானியா என்றைக்கும் உறுதியாக உள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

கொரிய தீபகற்ப பிரச்சினையை தீர்ப்பதில் சீனா முன்னெடுத்துள்ள நடவடிக்கைக்கு பிரித்தானியா மதிப்பளிக்கின்றது எனவும் பிரித்தானியப் பிரதமர் கூறியுள்ளார்.

இதேவேளை சீன ஜனாதிபதி தெரிவித்தபோது, ‘இரு நாடுகளுக்கும் இடையில் உயர்மட்டப் பரிமாற்றங்கள் மேற்கொள்ளப்பட வேண்டும் என்பதுடன், பொருளாதாரம் மற்றும் வர்த்தகம், கலாசார கட்டமைப்புகள் பேணப்பட வேண்டும். அத்துடன், இரு நாடுகளுக்கும் இடையில் அபிவிருத்தி மூலோபாயங்கள் ஏற்படுத்தப்பட வேண்டும்’ எனக் கூறியுள்ளார்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg