Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

மலசலகூடம் இருந்தும் மாணவர்கள் பயன்படுத்த முடியாத நிலை!

In இலங்கை
Updated: 08:21 GMT, Sep 26, 2017 | Published: 08:21 GMT, Sep 26, 2017 |
0 Comments
1337
This post was written by : Ravivarman

கிளிநொச்சி மத்திய ஆரம்ப வித்தியாலயத்தில் வசதியான மலசல மலசலகூடங்கள் அமைக்கப்பட்டும் அதனை பயன்படுத்த முடியாத நிலையில் மாணவர்கள் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த மலசலகூடத் தொகுதி பதினைந்து இலட்சம் ரூபா பெறுமதியில் அமைக்கப்பட்டதாகவும் தனியார் ஒருவரின் தலையீடு காரணமாக அவற்றினை பயன்படுத்த முடியாதுள்ளதாக பெற்றோரும், கல்விச் சமூகமும் கவலை தெரிவித்துள்ளன.

இது குறித்து மேலும் தெரியவருவதாவது, கிளிநொச்சியில் நகரின் மத்தியில் அமைந்துள்ள மத்திய ஆரம்ப வித்தியாலயத்தின் காணியின் ஒரு பகுதியில் ஜந்து குடும்பங்கள் வசிக்கின்றன. இவர்களுக்கு கிளிநொச்சியில் நகருக்குட்பட்ட இரணைமடுச் சந்திருக்கருகில் இரண்டு பரப்பு வீதம் பெறுமதிமிக்க மாற்றுக்காணிகள் வழங்கப்பட்டுள்ளன.

இந்நிலையில் சொந்தமாக வழங்கப்பட்டுள்ள மாற்றுக்காணிக்கு நான்கு குடும்பங்கள் செல்ல தயாராக அங்கு வீடுகள் அமைக்கும் பணியில் ஈடுபட்டு வரும் நிலையில், வெதுப்பகம் ஒன்றை நடத்திவரும் ஒருவர் மாத்திரமே பாடசாலைக் காணியை விட்டுச் செல்வதற்கு மறுப்புத் தெரிவித்து வருகின்றார்.

இதனாலேயே அப்பாடசாலையின் 780 மாணவர்கள் குறித்த மலசலகூடத் தொகுதியினைப் பயன்படுத்த முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.

இது தொடர்பில் பலரின் கவனத்திற்கு கொண்டு சென்றும் இதுவரை எவ்வித பயனும் ஏற்படவில்லை என பாடசாலையின் கல்விச் சமூகம் கவலை தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

IMG_2025 IMG_2023 IMG_2022

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg