Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

அவுஸ்ரேலியாவை சீண்டிய இந்திய வீரர்! – கிளார்க் அளித்த பதில்

In கிாிக்கட்
Updated: 09:29 GMT, Sep 26, 2017 | Published: 09:29 GMT, Sep 26, 2017 |
0 Comments
2183
This post was written by : Puvanes

அவுஸ்ரேலிய அணியை கிண்டல் செய்யும் விதமாக இந்திய அணியின் சுழல்பந்து வீச்சாளர் ஹர்பஜன் சிங் வெளியிட்ட டுவிட்டர் பதிவிற்கு அவுஸ்ரேலியாவின் முன்னாள் வீரர் கிளார்க் பதில் தெரிவித்துள்ளார்.

இந்திய சுற்றுப்பயணத்தினை மேற்கொண்டுள்ள அவுஸ்ரேலிய அணி தொடர்ந்தும் தோல்விகளை சந்தித்து வருவதனால் ஹர்பஜன் அண்மையில் “மேட், நீங்கள் உங்கள் ஓய்வை திரும்பப்பெற்றுக் கொண்டு மீண்டும் விளையாட வேண்டும்” என குறிப்பிட்டிருந்தார்.

மேலும், “அவுஸ்ரேலியா முதற் தர துடுப்பாட்ட வீரர்களை உருவாக்கியது முடிந்து விட்டது. தற்போது தரமான துடுப்பாட்ட வீரர்கள் இல்லை எனவும் ஹர்பஜன் டுவிட்டர் மூலமாக தெரிவித்திருந்தார்.

அவருடைய குறித்த கருத்துகளுக்கு எதிர்க்கருத்தினை வெளியிட்ட கிளார்க், “உங்களின் பதிவை இப்போதே நான் பார்த்தேன். தற்போது எனது வயதான கால்கள் குளிரூட்டப்பட்ட வர்ணனை அறைக்குள் அமர்ந்துள்ளது. அவுஸ்ரேலியா சில செயற்பாடுகளைச் செய்யவுள்ளது” என டுவிட்டர் மூலமாக பதில் அளித்துள்ளார்.

இதேவேளை, அணியில் எந்த இடத்தில் தவறு நடக்கின்றது என்பதனை கண்டு பிடிக்க முடியவில்லை என அவுஸ்ரேலிய அணியின் தலைவர் ஸ்மித் தெரிவித்திருந்தமையும் சுட்டிக்காட்டப்படத்தக்கது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg