Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

ஓ.பி.எஸ். கருத்துக்கு விவசாயிகள் எதிர்ப்பு

In இந்தியா
Updated: 10:19 GMT, Sep 26, 2017 | Published: 10:19 GMT, Sep 26, 2017 |
0 Comments
1253
This post was written by : Varothayan

பெரியாறு அணை விவகாரத்தில் தமிழக துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்த கருத்துக்கு விவசாயிகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

பெரியாறு அணையில் இருந்து கம்பம் பள்ளத்தாக்கு பகுதி பாசனத்திற்காக நேற்று தண்ணீர் திறக்கப்பட்டது.

இதில் கலந்து கொண்டு தண்ணீரை திறந்து வைத்த துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் செய்தியாளர்களிடம் பேசுகையில், பெரியாறு அணையில் 152 அடி நீர் தேக்குவது குறித்து கேரளா- தமிழக முதல்வர்கள் பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காண்பார்கள் என்றார்.

இதற்கு தமிழக விவசாயிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இது குறித்து தமிழ்நாடு அனைத்து விவசாயிகள் சங்க ஒருங்கிணைப்பு குழு செயலாளர் செங்குட்டுவன் கூறுகையில், பெரியாறு அணையில் 152 அடி தண்ணீர் தேக்கலாம் என உச்சநீதிமன்றமே தீர்ப்பு வழங்கி உள்ளது.

எனவே, இதனை நடைமுறை படுத்த தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். அதை விடுத்து கேரள அரசுடன் பேச்சுவார்த்தை என்பது தேவையில்லாதது – என்றார்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg