Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

மீண்டும் கம்பீரமாகத் தோன்றவுள்ள ‘நடிகர் திலகம்’

In இந்தியா
Published: 10:32 GMT, Sep 26, 2017 |
0 Comments
1349
This post was written by : Varothayan
Sivaji-Ganesan-Manimandam

சிவாஜிகணேசனின் 90 ஆவது பிறந்த நாளான ஒக்டோபர் முதலாம் திகதி, அவரது மணிமண்டபத்தை திறக்க தமிழக அரசு முடிவு செய்துள்ளது. முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அதை திறந்து வைப்பார் என்று அரசு வட்டாரங்கள் தெரிவித்தன.

‘நடிகர் திலகம்’ சிவாஜிகணேசன் மணிமண்டபத்தை அடையாறு சத்யா ஸ்டூடியோ அருகே தமிழக அரசு அமைத்துள்ளது. சுமார் 2 ஆயிரம் சதுர அடி பரப்பளவில் பல கோடி ரூபாய் செலவில் இந்த மணி மண்டபம் கட்டப்பட்டுள்ளது.

மெரினா கடற்கரையில் இருந்து அப்புறப்படுத்தப்பட்ட அவரது சிலை, இந்த மணி மண்டபத்தில் நிறுவப்பட்டுள்ளது. எனவே, சிவாஜி கணேசனின் கம்பீரத் தோற்றத்தை ரசிகர்கள் இனி மீண்டும் கண்டு மகிழ முடியும்.

திரை உலகில் சிவாஜி கணேசன் ஆற்றிய கலைச்சேவையை கௌரவிக்கும் விதமாக சென்னை மெரினா கடற்கரை காமராஜர் சாலையில் கடந்த 2006 ஆம் ஆண்டு ஜூலை 12 ஆம் திகதி தி.மு.க. ஆட்சியில் நிறுவப்பட்ட சிலை, கடந்த ஓகஸ்ட் மாதம் அங்கிருந்து அகற்றப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg