Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

சச்சின், தோனி வரிசையில் இணையும் ஓர் சாதனைப் பெண்

In கிாிக்கட்
Updated: 10:51 GMT, Sep 26, 2017 | Published: 10:51 GMT, Sep 26, 2017 |
0 Comments
1824
This post was written by : Puvanes

இந்திய பெண்கள் கிரிக்கெட் அணியின் தலைவியான மிதாலி ராஜின் வாழ்க்கை திரைப்படமாக எடுக்கப்படவுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.

இவர் சர்வதேச கிரிக்கட் போட்டிகளில் 6 ஆயிரம் ஓட்டங்களைக் கடந்த ஒரே வீராங்கனை என்ற சாதனை படைத்தவர் என்பதோடு, அர்ஜூனா விருதினையும் பெற்ற ஒருவராவார்.

மேலும், இந்தியாவின் 4ஆவது உயரிய விருதான பத்ம ஸ்ரீ விருதினையும் மிதாலி பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் மிதாலி ராஜின் வாழ்க்கையை அடிப்படையாகக் கொண்டு வியாகம் 18 மோசன் பிக்சர்ஸ் எனப்படும் நிறுவனம் திரைப்படம் ஒன்றினை வெளியிடவுள்ளது.

இது குறித்து மிதாலி கருத்து வெளியிடும் போது, “நிறைய பேருக்கு இந்தப்படம் ஓர் தூண்டுதலாக அமையும் எனவும், சிறுமிகள் விளையாட்டை தங்கள் தொழிலாக எடுத்துக் கொள்ள இது ஏதுவாக அமையும் எனவும் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, இந்திய அணியின் முன்னாள் தலைவர் தோனி மற்றும் கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் போன்றோரினது கிரிக்கெட் வாழ்வும் திரைப்படமாக வெளிவந்திருந்தமையும் சுட்டிக்காட்டப்படத்தக்கது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg