Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site
தலைப்பு செய்திகள்

சுதந்திரத்துக்கான வாக்கெடுப்பு நடைபெறும் – கதலோனிய ஜனாதிபதி

In
Published: 11:24 GMT, Sep 26, 2017 |
0 Comments
1105
icon_com
This post was written by : Suganthini
SPAIN

ஸ்பெய்னிலிருந்து சுதந்திரம் கோரும் கதலோனியா, எதிர்வரும் ஒக்டோபர் மாதம் முதலாம் திகதி சுதந்திரத்துக்கான வாக்கெடுப்பை நடத்துவதற்குத் திட்டமிட்டுள்ளது. இந்த வாக்கெடுப்புக்கு எதிர்ப்பு தெரிவிக்கப்படும் போதிலும், வாக்கெடுப்பு நடைபெறும் என, கதலோனிய ஜனாதிபதி கார்லெஸ்புகிட்மோன்ட் (Carles Puigdemont) தெரிவித்துள்ளார்.

எனவே, ஒக்டோபர் முதலாம் திகதி நடைபெறும் வாக்கெடுப்பில் அனைத்து மக்களையும் கலந்துகொள்ளுமாறு அவர் அழைப்பு விடுத்துள்ளார்.

ஸ்பெய்னில் நிலவும் பதற்றமான சூழ்நிலைக்கு மத்தியிலும், கதலோனிய ஜனாதிபதி இன்று (செவ்வாய்க்கிழமை) அமைச்சரவையைக் கூட்டியுள்ளார். இதன்போதே, அவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார்.

இதற்கிடையில், வாக்கெடுப்பை நிறுத்தி மோசமான விளைவுகளைத் தடுப்பதற்கு நடவடிக்கை எடுக்குமாறு பொலிஸாருக்கு ஸ்பெய்ன் பிரதமர் மரியானோ ரஜோய் உத்தரவிட்டுள்ளார்.

கதலோனியாவின் சுதந்திரத்துக்கான வாக்கெடுப்புக்கு ஸ்பெய்ன் அரசியலமைப்பு நீதிமன்றம் தடை விதித்துள்ளதைத் தொடர்ந்து, கதலோனியாவிலுள்ள அச்சு அலுவலகங்களிலும் பத்திரிகை அலுவலகங்களிலும் அண்மையில் பொலிஸார் நடத்திய சோதனையின்போது, 10 மில்லியன் வாக்குச்சீட்டுகளை கைப்பற்றியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg