Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site
தலைப்பு செய்திகள்

பாண்ட்யா குறித்து முதன்முறையாக கருத்து தெரிவித்த டிராவிட்

In கிாிக்கட்
Updated: 04:52 GMT, Sep 27, 2017 | Published: 04:51 GMT, Sep 27, 2017 |
0 Comments
2400
icon_com
This post was written by : Anojkiyan
hd

இந்தியக் கிரிக்கெட் அணியின் இளம் சகலதுறை வீரரான ஹர்திக் பாண்ட்யா தனது கிரிக்கெட் வாழ்க்கையை மாற்றியிருப்பதாக அணியின் முன்னாள் தலைவர் ராகுல் டிராவிட் கூறியுள்ளார்.

சமீபகாலமாக அதிரடியின் மூலம் பலகோடி இரசிகர்களை தனது வலையில் வீழ்த்தியுள்ள ஹர்திக் பாண்ட்யா, தற்போது அவுஸ்ரேலிய அணிக்கெதிரான தொடரில் அபாரமாக துடுப்பெடுத்தாடியதன் மூலம் தரவரிசையில் முன்னேற்றம் கண்டுள்ளார்.

இந்நிலையில் ஹர்திக் பாண்ட்யா குறித்து ராகுல் டிராவிட் கூறுகையில், ”ஹர்திக் பாண்ட்யாவை சூழ்நிலைக்கு ஏற்ற வகையில் விளையாட தயாராகிக் கொண்டிருக்கிறார். அனைத்து பெருமைகளும் அவருக்குத்தான் சேரும். அவர் தனது கிரிக்கெட் வாழ்க்கையை மாற்றிக்கொண்டுள்ளார்.

அவர் தன்னுடைய இயற்கையான துடுப்பாட்டத்தை வெளிப்படுத்துகிறார் என்ற கருத்து நிலவுகிறது. இது என்னை ஏமாற்றம் அடையச் செய்கிறது. ஏனென்றால், இயற்கையான துடுப்பாட்டம் என்பதை நான் ஏற்றுக் கொள்ளும் விடயம் அங்கு இல்லை. மாறுபட்ட சூழ்நிலையில் எப்படி விளையாடுகிறார் என்பதுதான் முக்கியம்’ என கூறினார்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg