Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

பொருளாதார நிலைமையில் முதலிடத்திலுள்ள சுவிஸ்லாந்து

In ஐரோப்பா
Published: 06:13 GMT, Sep 27, 2017 |
0 Comments
1211
icon_com
This post was written by : Suganthini
swiss

உலக பொருளாதார நிலைமையில் சுவிஸ்லாந்து முன்னிலையில் உள்ளதாக, உலக பொருளாதார அமைப்பு தெரிவித்துள்ளது.

ஜெனீவாவை அடித்தளமாகக் கொண்டு இயங்கும் உலக பொருளாதார அமைப்பானது, ஒவ்வொரு வருடமும் ஜனவரி மாதத்தில் உலக அதிகாரவர்த்தினருக்கான கூட்டத்தைக் கூட்டி வருகின்றது.

இதேவேளை பொருளாதாரம், சந்தை, சுகாதாரம், கல்வி, உட்கட்டமைப்பு, சந்தை உள்ளிட்ட 12 காரணிகளை முன்வைத்து இந்த அமைப்பு மதிப்பீடுகளை மேற்கொண்டு வருகின்றது.

இந்நிலையில், இந்த வருட மதிப்பீட்டுக்கமைய இந்தப் 12 காரணிகளையும் சுவிஸ்லாந்து மிக நன்றாகக் கையாள்வதுடன், போட்டித்தன்மை கொண்ட பொருளாதார சூழ்நிலைக்கு மத்தியிலும் சுவிஸ்லாந்து தனது இடத்தை முன்னிலையில் தக்கவைத்துக் கொண்டுள்ளதாகவும் அந்த அமைப்பு கூறியுள்ளது.

இந்த வருட மதிப்பீட்டுக்கமைய சுவிஸ்லாந்து முதலாமிடத்திலும், அமெரிக்காவும் சிங்கப்பூரும் இரண்டாவது இடத்திலும் உள்ளன. கொங்கொங் மூன்றாவது இடத்திலிலுள்ளது இதேவேளை, ஜப்பான் ஒன்பதாவது இடத்துக்கு பின்தள்ளப்பட்டுள்ளதாகவும் அந்த அமைப்பு கூறியுள்ளது.

Banner
toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg