Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

உகண்டா நாடாளுமன்றத்தில் கைகலப்பு

In உலகம்
Updated: 06:40 GMT, Sep 27, 2017 | Published: 06:40 GMT, Sep 27, 2017 |
0 Comments
1229
This post was written by : Suganthini

உகண்டா நாடாளுமன்றத்தில் ஜனாதிபதி பதவி குறித்த விவாதத்தை தொடர்ந்து, அங்கு நேற்று (செவ்வாய்க்கிழமை) கைகலப்பு ஏற்பட்டுள்ளது.

உகண்டாவில் யுவேரி முசவெனி ஜனாதிபதியாக செயற்பட்டு வருகின்றார். இந்நிலையில், அவர் தமது பதவிக் காலத்தை மேலும் நீடிக்க விரும்புவதாக தெரிவித்துள்ளார்.

எனினும், இதற்கு அந்த நாட்டு எதிர்க்கட்சியினர் பலத்த எதிர்ப்பை வெளியிட்டு வருகின்றனர்.

இது தொடர்பில் நாடாளுமன்றத்தில் சுமார் ஆறு மணித்தியாலங்கள்வரை விவாதம் நடைபெற்றுள்ளது. இறுதியில் ஆளும் கட்சியினரும், எதிர்க்கட்சியினரும் ஒருவருக்கொருவர் மோதிக்கொண்டனர்.

இதன்போது, கதிரைகளை வீசி எறிந்தும், வாய்த்தர்க்கத்தில் ஈடுபட்டும் அவர்கள் கைகலப்பில் ஈடுபட்டுள்ளனர்.

சபாநாயகர் ரெபேக்கா கடாஹாவின் உத்தரவையும் மீறி நாடாளுமன்ற உறுப்பினர்கள் கைகலப்பில் ஈடுபட்டுள்ளனர்.

இந்த நிலையில் நாடாளுமன்றம் ஒத்திவைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg