Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

இலங்கை வீரர் டிக்வெல்ல விசித்திர சாதனை! வியப்பில் இரசிகர்கள்

In கிாிக்கட்
Published: 07:37 GMT, Sep 27, 2017 |
0 Comments
5589
This post was written by : Anojkiyan
Niroshan-Dickwella4

இலங்கை கிரிக்கெட் அணியின் விக்கெட் காப்பாளரும் துடுப்பாட்ட வீரருமான நிரோஷன் டிக்வெல்ல, புதிய உலக சாதனையொன்றை நிலைநாட்டியுள்ளார்.

சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் அதிக இன்னிங்சுகளில் டக்கவுட் முறையில் ஆட்டமிழக்காத முதல் வீரர் என்ற சாதனையை அவர் தன்வசப்படுத்தியுள்ளார்.

கடந்த 2014ஆம் ஆண்டு சர்வதேச கிரிக்கெட் உலகிற்கு அறிமுகமான டிக்வெல்ல, முன்று வகை கிரிக்கெட்டிலும் 43 போட்டிகளில் விளையாடி 50 இன்னிங்சுகளில் டக்கவுட் முறையில் ஆட்டமிழக்காது களத்தில் இருந்துள்ளார்.

இதன்மூலம் இந்திய வீரரான ப்ரிஜேஷ் பட்டேலின் சாதனையை நிரோஷன் டிக்வெல்ல, முறியடித்துள்ளார். ப்ரிஜேஷ் பட்டேல் இதற்கு முன்னதாக 31 போட்டிகளில் பங்கேற்று 47 இன்னிங்சுகளில் இந்த சாதனையை நிலைநாட்டியிருந்தார்.

டிக்வெல்ல இதுவரை 50 இன்னிங்சுகளிலும் 11 அரைச் சதங்கள், 2 சதங்கள் உள்ளடங்கலாக மொத்தமாக 1,677 ஓட்டங்களினை குவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg