Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site
தலைப்பு செய்திகள்

விளையாட்டு வீரர்களை பாராட்டியுள்ள இளவரசர் ஹரி

In
Published: 07:42 GMT, Sep 27, 2017 |
0 Comments
1037
icon_com
This post was written by : Suganthini
harry

கனடா, ரொறன்டோவில் நடைபெறும் பராஒலிம்பிக் பாணியிலான சர்வதேச விளையாட்டு நிகழ்வில் பங்குபற்றியுள்ள விளையாட்டு வீரர்களை பிரித்தானிய இளவரசர் ஹரி பாராட்டியுள்ளார்.

பராஒலிம்பிக் பாணியிலான சர்வதேச விளையாட்டு நிகழ்வு, ரொறன்டோவில் கடந்த சனிக்கிழமை ஆரம்பமாகி நடைபெற்று வருகின்றது.

இந்நிலையில், ரொறன்டோவிலுள்ள பராஒலிம்பிக் அறக்கட்டளை நிலையத்தில் விளையாட்டு வீரர்களை நேற்று (செவ்வாய்க்கிழமை) சந்தித்துள்ள இளவரசர் ஹரி, அவர்களுக்குப் பாராட்டுத் தெரிவித்துள்ளார்.

அத்துடன், பராஒலிம்பிக் விளையாட்டு வீரர்கள் சமுதாயத்தில் முன்மாதிரியானவர்கள் எனவும் இளவரசர் ஹரி தெரிவித்துள்ளார்.

எதிர்வரும் 30ஆம் திகதிவரை நடைபெறும் இந்நிகழ்வில் சைக்கிளோட்டம், படகுப் போட்டி, கரப்பந்தாட்டம், நீச்சல், வலைப்பந்தாட்டம், ரக்பி, டென்னிஸ் என 12 வகையான விளையாட்டுகள் இடம்பெறுகின்றன.

இந்த விளையாட்டுகளில், யுத்த நடவடிக்கைகளின்போது அங்கவீனமான 550க்கும் அதிகமான படையினர் கலந்துகொண்டுள்ளனர்.

யுத்த நடவடிக்கைகளின்போது அங்கவீனமான படையினரைக் கருத்திற்கொண்டு பல்வேறு வகையான விளையாட்டுகளை உள்ளடக்கிய பராஒலிம்பிக் விளையாட்டு நிகழ்வை கடந்த மூன்றாண்டுகளுக்கு முன்னர் இளவரசர் ஹரி ஆரம்பித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Banner
toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg