Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site
தலைப்பு செய்திகள்

மன்னார் வைத்தியசாலையில் விபத்துக்கள் தொடர்பான விழிப்புணர்வு ஒத்திகை!

In இலங்கை
Published: 08:14 GMT, Sep 27, 2017 |
0 Comments
1133
icon_com
This post was written by : Ravivarman

வீதி விபத்துக்கள் குறித்து பொது மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தும் ஒத்திகை நிகழ்வு இன்று (புதன்கிழமை) காலை மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையில் இடம்பெற்றது.

மன்னார் மாவட்டத்தில் அதிகரித்து வரும் வீதி விபத்துக்களின் போது விபத்திற்கு உள்ளாகியவர்களை எவ்வாறு வைத்தியசாலைக்கு அழைத்து வந்து அவசர சிகிச்சைகளை மேற்கொள்ளுவது குறித்து வைத்தியசாலை பணியாளர்களுக்கும், பொது மக்களுக்கும் இதன்போது பல விளக்கங்கள் வழங்கப்பட்டன.

மேலும் விபத்து ஒன்று இடம்பெற்று அதிகமானவர்கள் காயமடைந்திருந்தால் அவர்களை வைத்தியசாலைக்கு கொண்டு வருவதற்கு முன் வைத்தியசாலையினை தயார் நிலையில் வைத்தல், வெளிநோயாளர் பிரிவில் உள்ளவர்களை வேறு இடத்திற்கு மாற்றி வெளிநோயாளர் பிரிவைத் தயார் படுத்துதல், வைத்தியர்கள் பணியாளர்கள் தயார் நிலையில் இருத்தல் போன்ற ஒத்திகைகளும் இடம்பெற்றன.

இதன்போது, மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையின் வைத்திய அத்தியட்சகர் திருமதி அன்ரன் சிசில், அனர்த்த பாதுகாப்பு பிரிவினர், போக்குவரத்துப் பொலிஸார், இலங்கை செஞ்சிலுவைச்சங்கத்தின் மன்னார் கிளை தொண்டர்கள், மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையின் வைத்தியர்கள், தாதியர்கள், ஊழியர்கள், மற்றும் பொது மக்கள், உள்ளிட்ட பலரின் பங்களிப்புடன் குறித்த நிகழ்வு இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.

DSC_0058 DSC_0050 DSC_0045 DSC_0041 DSC_0039 (1) DSC_0033 DSC_0032 DSC_0004

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg