Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site
தலைப்பு செய்திகள்

வித்தியா கொலை – தீர்ப்பு வெளியாகியது – 7 பேருக்கு மரண தண்டனை

In இலங்கை
Published: 08:00 GMT, Sep 27, 2017 |
0 Comments
2042
icon_com
This post was written by : Kalavarshny Kanagaratnam

யாழ். புங்குடுதீவு மாணவி வித்தியா கொலை சந்தேகநபர்கள் 7 பேருக்கும் மரண தண்டனை விதித்து தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது.

யாழ். மேல் நீதிமன்றத்தின் ட்ரயல் அட் பார் தீர்ப்பாயத்தின் முன்னிலையில் சற்றுமுன்னர் இத் தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. மாணவி வித்தியாவை கூட்டு பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தியமை மற்றும் படுகொலை செய்தமை ஆகிய குற்றச்சாட்டு சுமத்தப்பட்ட 2ஆம், 3ஆம், 4ஆம், 5ஆம், 6ஆம்,  8ஆம் மற்றும் 9ஆம் சந்தேகநபர்களுக்கு இத் தண்டனை வழங்கப்பட்டுள்ளதோடு, ஒவ்வொருவருக்கும் தலா 30 வருட கடூழிய சிறைத்தண்டனையும் விதிக்கப்பட்டுள்ளது.

அத்தோடு, ஒவ்வொருவருக்கும் தலா 40,000 ரூபாய் தண்டப்பணம் விதிக்கப்பட்டுள்ளதோடு, மாணவி வித்தியாவின் குடும்பத்திற்கு 1 மில்லியன் ரூபாய் நட்டஈடு வழங்குமாறும் உத்தரவிடப்பட்டுள்ளது.

வித்தியாவின் தாய் உள்ளிட்ட குடும்பத்தார், மனித உரிமை செயற்பாட்டாளர்கள், சமூக ஆர்வலர்கள், வித்தியாவின் நண்பர்கள் உள்ளிட்ட பெருமளவானோர் கூடியிருந்த மன்றில், விளக்குகள் யாவும் அணைக்கப்பட்டு இத் தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

இலங்கை மக்களை மாத்திரமன்றி சர்வதேச சமூகத்தையே உலுக்கிய இக் கொடூர சம்பவத்திற்கு நீதி கிடைக்க வேண்டுமென கடந்த இரண்டு வருட காலமாக போராடி வந்த நிலையில், தீர்மானம் மிக்க இந்த தீர்ப்பு இன்று வழங்கப்பட்டுள்ளது.

இக் கொலையுடன் சுவிஸ் நாட்டின் மாபியா குழுவொன்றும் தொடர்புபட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டிருந்த நிலையில், இவ் வழக்கின் தீர்ப்பு பெரிதும் எதிர்பார்க்கப்பட்டது.

இதேவேளை, கொலையாளிகள் அரசியல் மற்றும் பொலிஸ் செல்வாக்கு மிகுந்தவர்கள் என தெரிவிக்கப்படும் நிலையில், எந்தவொரு சந்தர்ப்பத்திலும் இவர்கள் விடுவிக்கப்படாத அளவிற்கு தண்டனை வழங்கப்பட வேண்டுமென பாதிக்கப்பட்ட தரப்பினர் கோரிக்கை விடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

குற்றவாளிகளின் விபரம்

♦ 2 வது எதிரி – பூபாலசிங்கம்  ஜெயக்குமார்

♦ 3 வது எதிரி – பூபாலசிங்கம் தவக்குமார்

♦ 4 வது எதிரி – மகாலிங்கம் சசீந்திரன்

♦ 5 வது எதிரி –  தில்லைநாதன் சந்திரகாசன்

♦ 6 வது எதிரி  – சிவதேவன் துசாந்த்

♦ 8 வது எதிரி -ஜெயதரன் கோகிலன்

♦ 9 வது எதிரி – மகாலிங்கம் சசிக்குமார்

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg