Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site
தலைப்பு செய்திகள்

கதலோனிய வாக்கெடுப்புக்கு தடை: பொலிஸாரை நிறுத்த ஏற்பாடு

In
Updated: 08:42 GMT, Sep 27, 2017 | Published: 08:41 GMT, Sep 27, 2017 |
0 Comments
1074
icon_com
This post was written by : Suganthini
spain

ஸ்பெய்னிலிருந்து சுதந்திரம் கோரும் கதலோனியாவில் சுதந்திரத்துக்கான வாக்கெடுப்பில் பொதுமக்கள் கலந்துகொள்வதை தடுக்கும் நோக்கில், வாக்கெடுப்பு நிலையங்களுக்கு அருகில் மேலதிக பொலிஸாரை பாதுகாப்புக் கடமையில் ஈடுபடுத்துவதற்கு ஸ்பெய்ன் அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது.

அத்துடன், பாடசாலைகள் மற்றும் பொதுக் கட்டடங்களில் வாக்குச் சாவடிகள் அமைக்கப்படுவதை தடுப்பதற்கான நடவடிக்கை எடுக்குமாறும் பொலிஸாருக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

இதேவேளை, ஸ்பெய்னிலிருந்து சுதந்திரம் கோரும் கதலோனியாவில் வாக்கெடுப்புக்கான அனைத்து ஆவணங்களும் அழிக்கப்பட்டுள்ளன. எனவே, எதிர்வரும் முதலாம் திகதி வாக்கெடுப்பு நடைபெற மாட்டாது என, கதலோனியாவிலுள்ள ஸ்பெய்ன் அரசாங்கப் பிரதிநிதி என்றிக் மில்லோ (Enric Millo) தெரிவித்துள்ளார்.

ஸ்பெய்னிலிருந்து சுதந்திரம் கோரும் கதலோனியா, எதிர்வரும் ஒக்டோபர் மாதம் முதலாம் திகதி சுதந்திரத்துக்கான வாக்கெடுப்பை நடத்துவதற்குத் திட்டமிட்டது. இருப்பினும், இந்த வாக்கெடுப்புக்கு ஸ்பெய்ன் அரசியலமைப்பு நீதிமன்றம் தடை  விதித்திருந்தது.

இதனை அடுத்து, கதலோனியாவிலுள்ள அச்சு ஊடகங்கள், பத்திரிகை ஸ்தபானங்கள் உள்ளிட்டவற்றில் பொலிஸார் சோதனையில் ஈடுபட்டிருந்ததுடன், 10 மில்லியன் வாக்குச்சீட்டுக்களை கைப்பற்றப்பட்டிருந்தமை  குறிப்பிடத்தக்கது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg