Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site
தலைப்பு செய்திகள்

ரொறன்ரோ பாடசாலைகளை மூட வேண்டும்: ஆசிரியர்கள் கோரிக்கை

In கனடா
Published: 10:00 GMT, Sep 27, 2017 |
0 Comments
1112
icon_com
This post was written by : Anojkiyan
sis

ரொறன்ரோ உள்ளிட்ட ஒன்ராறியோவின் தென் பிராந்தியங்களில் உள்ள பாடசாலைகளை மூட வேண்டும் என ரொறன்ரோ ஆசிரியர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

கடந்த சில நாட்களாகவே அதி வெப்பம் காரணமாக மாணவர்கள் கடும் சிரமங்களை எதிர்நோக்கிவரும் நிலையில், வகுப்பறைகளை குளிர்விக்க நடவடிக்கை எடுக்குமாறும், இந்த பிரச்சினையை சரிசெய்வதற்கு அரசாங்கம் முன்வர வேண்டும் எனவும், அவர்கள் கேட்டுக்கொண்டுள்ளனர்.

வகுப்பறைகளினுள் 36 பாகை செல்சியஸ் வரையில் வெப்பம் நிலவும் நிலையில், இது கற்பித்தலுக்கோ கற்றலுக்கோ உகந்த சூழ்நிலை இல்லை எனவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.

இந்த அதி வெப்பம் காரணமாக மாணவர்கள் கடும் சிரமங்களை எதிர்நோக்கும் நிலையில், அதனைச் சீர்செய்வதற்கு தாம் பல்வேறு முயுற்சிகளை மேற்கொண்டு வருவதாக ரொறன்ரோ மாவட்ட பாடசாலைகள் சபை தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg