Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

பௌத்த தர்மம் போதித்தது இதுவா? – பிக்குகளை கைது செய்ய நடவடிக்கை!

In இலங்கை
Published: 09:58 GMT, Sep 27, 2017 |
0 Comments
11203
icon_com
This post was written by : Puvanes

ரோஹிங்கியா முஸ்லிம்கள் தங்கியுள்ள இடங்கள் மீது தாக்குதல் மேற்கொண்டவர்கள் யாராக இருந்தாலும் பாரபட்சமின்றி கைது செய்ய வேண்டும் என அமைச்சரவை இணைப் பேச்சாளரும் சிரேஷ்ட அமைச்சருமான ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார்.

அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பு இன்று அரசாங்க தகவல் திணைக்களத்தில் இடம்பெற்றது.

குறித்த ஊடக சந்திப்பில் கருத்து வெளியிடும் போதே அவர் இதனைக் கூறியுள்ளார். தொடர்ந்தும் அவர் அங்கு கருத்து வெளியிடும் போது,

ரோஹிங்கியா முஸ்லிம்கள் இப்போது புதிதாக இலங்கை வரவில்லை 2008ஆம் ஆண்டு காலப்பகுதிகளில் இலங்கை வந்து, 2012 ஆம் ஆண்டு வரை இலங்கையில் வசித்துள்ளார்கள்.

அப்போது கேள்வி கேட்காத பௌத்த பிக்குகள் இப்போது கேள்வி கேட்பது ஏன்? இதே பிக்குகள் அப்போது எங்கே சென்றார்கள். அப்போது மஹிந்த ராஜபக்ச ஆட்சி இருந்ததால் யாரும் கேள்வி கேட்கவில்லை.

இலங்கை அகதிகள் இலட்சக்கணக்கானோரை ஐரோப்பிய நாடுகள் அகதிகளாக ஏற்றுக் கொண்டுள்ளன. அப்படியான ஓர் நாட்டில் இருந்து கொண்டு அகதிகளுக்கு எதிராக பிக்குகள் நடந்து கொள்வது கண்டிக்கத்தக்கது.

பௌத்த தர்மம் இதனையா போதித்தது? ஒரு பௌத்தனாக இதனை முற்றாக நான் எதிர்க்கின்றேன். ரோஹிங்கிய முஸ்லிம்கள் மீது தாக்குதல் மேற்கொண்ட பிக்குகள், அதனை வேடிக்கை பார்த்த பொலிஸார் உட்பட அனைவர் மீதும் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் எனவும் ராஜித மேலும் தெரிவித்துள்ளார்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg