Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site
தலைப்பு செய்திகள்

சிக்கன் நக்கட்ஸ்

In
Published: 11:20 GMT, Sep 27, 2017 |
0 Comments
1136
icon_com
This post was written by : Anojkiyan
nut

தேவையான பொருள்கள்

எலும்பில்லாத கோழி இறைச்சி- அரை கிலோ
முட்டை -1
மிளகுத்தூள் – 1 தேக்கரண்டி
மிளகாய் தூள் – 1 தேக்கரண்டி
மைதா மாவு – 4 மேசைக்கரண்டி
பாண் தூள் – 10 மேசைக்கரண்டி
உப்பு – தேவையான அளவு
பொரிப்பதற்கு எண்ணெய் – தேவையான அளவு

செய்முறை

கோழி இறைச்சி துண்டுகளை நன்றாக கழுவி சிறிய துண்டுகளாக வெட்டிக்கொள்ளவும். கழுவிய இறைச்சி துண்டுகளை ஒரு பாத்திரத்தில் போட்டு அதன் மேல் மிளகாய் தூள், மிளகுத்தூள், உப்பு சேர்த்து நன்றாக கலந்து அரை மணி நேரம் ஊற வைக்கவும். முட்டையை உடைத்து ஒரு சிறிய பாத்திரத்தில் கலக்கி வைக்கவும். மைதா மாவுடன் சிறிது உப்பு சேர்த்து கலந்து வைக்கவும். பாண் தூளை ஒரு தட்டில் கொட்டி வைக்கவும்.

ஊறிய இறைச்சி துண்டுகளை மைதா மாவில் பிரட்டி பிறகு முட்டையில் புரட்டி இறுதியில் பாண் தூளில் பிரட்டி வைக்கவும். அடுப்பில் பாத்திரத்தை வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் இறைச்சி துண்டுகளை போடவும். ஒரு புறம் வெந்ததும் மறுபுறம் திருப்பி போடவும். மீதமுள்ள எல்லா இறைச்சி துண்டுகளையும் இதே முறையில் பொரித்து வைக்கவும். சுவையான சிக்கன் நக்கட்ஸ் ரெடி!

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg