Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

பௌத்த விகாரை விவகாரம்: பயங்கரவாத தடுப்பு விசாரணைப் பிரிவினர் அழைப்பு!

In இலங்கை
Published: 11:35 GMT, Sep 27, 2017 |
0 Comments
1478
This post was written by : Ravivarman
V.S.SIVAKARAN

மன்னார் மாவட்ட பொது அமைப்புக்களின் ஒன்றிய தலைவர் வி.எஸ். சிவகரனை விசாரணைக்கு வருமாறு கொழும்பு பயங்கரவாதத் தடுப்பு விசாரணைப் பிரிவினர், வவுனியா பயங்கரவாதத் தடுப்பு விசாரணைப் பிரிவினூடாக அழைப்பு விடுத்துள்ளதாக தெரிய வருகின்றது.

எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 2 ஆம் திகதி திங்கட்கிழமை காலை 9 மணிக்கு கொழும்பு பயங்கரவாத தடுப்பு  விசாரணைப்பிரிவின் 2 ஆம் பிரிவில் விசாரணைக்கு வருமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

குறித்த அழைப்பாணைக்கான கடிதம் வவுனியா பயங்கரவாத விசாரணைப்பிரிவினுடாக இன்று (புதன்கிழமை) மதியம் கிடைத்துள்ளதை வி.எஸ்.சிவகரன் உறுதிப்படுத்தியுள்ளார்.

மாந்தை திருக்கேதீஸ்வரம் பகுதியில் தனியாருக்கு சொந்தமான 10 ஏக்கர் காணியை அபகரித்து பௌத்த விகாரை அமைப்பது தொடர்பாக சிவகரன் தெரிவித்த கருத்துத் தொடர்பாகவே மேற்படி விசாரணைகள் இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg