Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site
தலைப்பு செய்திகள்

ஊபர் நிறுவன ஒப்பந்தக்காரர்கள் ஆர்ப்பாட்டம்

In
Published: 11:53 GMT, Sep 27, 2017 |
0 Comments
1118
icon_com
This post was written by : Suganthini

தொழிலாளர்களுக்கான அடிப்படை உரிமைகளை வலியுறுத்தி ஊபர் நிறுவன ஒப்பந்தக்காரர்களும் தொழிற்சங்கவாதிகளும்; லண்டனில் இன்று (புதன்கிழமை) ஆர்ப்பாட்டப் பேரணியில் ஈடுபட்டுள்ளனர்.

வாடகை கார் சேவைகளை வழங்கும் ஊபர் நிறுவனத்தின் சாரதிகள் சுயதொழில் நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர். அவர்களுக்கு எந்தவித இலாபங்களும் வழங்கப்படுவதில்லை எனவும் ஊபர் நிறுவனம் தெரிவித்துள்ளது.

வாடகை கார் சேவைகளை வழங்கும் ஊபர் நிறுவனத்தின் அனுமதிப்பத்திரத்தை புதுப்பிக்கப் போவதில்லை என லண்டனுக்கான போக்குவரத்து நிறுவனம் அறிவித்திருந்தது.

வாடகை கார் சேவையை வழங்கிவரும் தனியார் நிறுவனமான ஊபர், லண்டனில் தொடர்ந்து செயற்பட தகுதியற்றது எனத் தெரிவித்து உரிமத்தை புதுப்பிப்பதற்கு அந்நிறுவனம் மறுப்பு தெரிவித்திருந்தது.

மேலும், ஊபரின் அணுகுமுறை மற்றும் நடத்தைகள் பாதுகாப்பு தாக்கங்களை ஏற்படுத்தும் எனவும் லண்டனுக்கான போக்குவரத்து நிறுவனம் சுட்டிக்காட்டியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

லண்டனில் சுமார் 3.5 மில்லியன் பயணிகள் மற்றும் 40 ஆயிரம் சாரதிகள் ஊபரை பயன்படுத்தி வந்த நிலையில், அமெரிக்க நிறுவனமான ஊபருக்கான உரிமம் எதிர்வரும் 30ஆம் திகதியுடன் நிறைவடைகின்றமை குறிப்பிடத்தக்கது.

இதனை அடுத்து, லண்டனில் ஆர்ப்பாட்டப் பேரணி முன்னெடுக்கப்பட்டுள்ளது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg