Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site
தலைப்பு செய்திகள்

நாட்டில் மாற்றங்கள் ஏற்படுத்துவதற்கு அவகாசம் தேவை: ஜனாதிபதி!

In இலங்கை
Published: 16:00 GMT, Sep 27, 2017 |
0 Comments
1141
icon_com
This post was written by : Ravivarman
057-1140x798

அரசாங்கத்தினது ஆட்சியில் மாற்றங்களை ஏற்படுத்துவதற்கு குறிப்பிட்ட கால அவகாசம் தேவை எனவும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார்.

இன்று (புதன்கிழமை) பதுளையில் நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே ஜனாதிபதி இதனைக் குறிப்பிட்டுள்ளார். இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்,

“ஆட்சிப் பொறுப்பேற்கும் எந்தவொரு அரசாங்கமும் குறுகிய நாட்களில், அல்லது சில மாதங்களில் மாற்றங்களை ஏற்படுத்த முடியாது. அதற்கு சில கால அவகாசம் தேவைப்படும்.

எமது நல்லாட்சியில் நாட்டுக்குத் தேவையான சகல அபிவிருத்திப் பணிகளையும் நாம் வெற்றிகரமாக முன்னெடுத்து வருவதுடன் எமக்கு சர்வதேச அங்கீகாரமும் இருக்கின்றது.

நாம் அனைவரும் ஒற்றுமையாக நாட்டில் நிரந்தர சமாதானம் ஒன்றை ஏற்படுத்த வேண்டியது அவசியம்” என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg