Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

ஒரே பார்வையில் இன்றைய உலகச் செய்திகள்

In
Updated: 17:22 GMT, Sep 27, 2017 | Published: 17:20 GMT, Sep 27, 2017 |
0 Comments
1373
This post was written by : Sivaguru Siva

அமெரிக்க பாதுகாப்பு அமைச்சர் ஜெனரல் ஜேம்ஸ் மட்டிஸ் இன்று ஆப்கானின் காபூல் விமான நிலையத்தில் தரையிறங்குவதற்கு முன்னர் விமான நிலைய சுற்றாடலில் பல உந்துகணைகள்( றொக்கற்) விழுந்தது வெடித்தமை அமெரிக்கதரப்புக்கு அதிர்ச்சியை வழங்கியுள்ளது.

இந்த தாக்குதலில் ஜெனரல் ஜேம்ஸ் மட்டிஸ் மற்றும் அவரது பாதுகாப்பு குழுவுக்கு எந்த ஒரு பாதிப்பும் ஏற்படவில்லை. எனினும் உந்துகணைகளின் சிதறல்களால் ஐந்துபேர்காயமடைந்தனர்.

இந்தத்தாக்குலுக்கு தலிபான் அமைப்பும் ஐ.எஸ் அமைப்பும் உரிமைகோரியுள்ளது. அத்துடன் அமெரிக்க பாதுகாப்பு அமைச்சர் பயணஞ்செய்ய விமானத்தை குறிவைத்து தாக்குதலை நடத்தியதாகவும் குறிப்பிட்டுள்ளன.

The Labour Party Announce Their New Leader And Deputy Leader

பிரித்தானிய தொழிற்கட்சி தற்போது பிரித்தானிய மக்களின் விருப்பங்களை பிரதிபலிக்கும் பிரதான நீரோட்டத்தில் இணைந்திருப்பதாக தொழிற்கட்சியின் தலைவர் ஜெரமி கோர்பின் தெரிவித்துள்ளார்.

பிரித்தானிய தொழிற்கட்சியின் வருடாந்த மாநாட்டில் தான் வழங்கிய சுமார் 75 நிமிட உரையில் அவர் இதனைத் தெரிவித்தார்.

பிரித்தானியாவை ஆட்சிசெய்வதற்கான காத்திருப்புநிலையில் தொழிற்கட்சி இருப்பதாகவும் ஜெரமி கோர்பின் சுட்டிக்காட்டியுள்ளார்.

ஜெரமி கோர்பின் வழங்கிய இந்த உரை சிறப்பான ஒரு உரையாக அமைந்ததாக தொழிற்கட்சியின் முன்னாள் தலைவர் எட் மிலிபான்ட் தெரிவித்துள்ளார்.

_98042447_mediaitem98042443

சுதந்திர குர்திஸ்தானுக்கு அங்கீகாரம்கோரி நேற்று முன்தினம் ஈராக்கிய  குர்திஸ் பிராந்திய அரசாங்கம் நடத்திய குடியொப்ப வாக்கெடுப்பின் முடிவுகள் வெளிப்பட்டுள்ளன.

சுமார் 33 லட்சம் மக்கள் வாக்களித்த இந்ததேர்தலில் 92 வீதமான வாக்காளர்கள் ஈராக்கில் இருந்து பிரிந்து சுதந்திர குர்திஸ்தானை அமைப்பதற்கு அங்கீகாரத்தை வழங்கியுள்ளனர்

குடியொப்பத்தேர்தல் முடிவுகளை மீளெடுக்குமாறு ஈராக்கியப்பிரதமர் கோரிக்கை விடுத்தநிலையில் தேர்தல் முடிவுகள் வெளிப்பட்டுள்ளன.

சுதந்திர குர்திஸ்தானுக்குரிய சுதந்திரவாக்கெடுப்பை நடத்துவதற்கு அனைத்துலக ரீதியில் எதிர்ப்புகள் வெளியிடப்பட்டாலும் இந்த எதிர்ப்புகளை மீறி தேர்தலை நடத்தப்பட்டது.

3234

தாய்லாந்தின் முன்னாள் பிரதமர் யிங்லக்சினவாத்ரா ஏற்கனவே நாட்டை விட்டு தப்பியோடிய நிலையில் ஊழல் முறைகேட்டுக்குற்றச்சாட்டில் அவருக்கு இன்று ஐந்து ஆண்டு  சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

யிங்லக் சினவாத்ராவின் அரசாங்கம் அரிசி மானியத்திட்டத்தைத் தவறாக கையாண்டதன் விளைவாக நாட்டுக்கு சுமார் 8 பில்லியன் அமெரிக்க டொலர் இழப்பு ஏற்பட்டதாக தாய்லாந்து உச்சநீதிமன்றம் தனது தீர்ப்பில் குறிப்பிட்டுள்ளது.

ஆயினும் டுபாய்க்குதப்பிச்சென்றுள்ள சினவாத்ரா தன் மீதான குற்றச்சாட்டுகளை மறுத்துள்ளார்.

jayalalithaa PTI 750x500_1

தமிழகத்தின் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா உடல்நலமின்றி மருத்துமனையில் இருந்த காலகட்டத்தில் இடம்பெற்ற இடைத்தேர்தல்களின்போது, இரட்டை இலை சின்னத்தை ஒதுக்கீடு செய்வதற்கு அவரது கைரேகையை ஏற்றுக்கொண்டமை குறித்து விளக்கமளிக்குமாறு சென்னை உயர் நீதிமன்றம் இந்திய தேர்தல் ஆணையத்துக்கு அழைப்பாணை அனுப்பியுள்ளது.

திருப்பரங்குன்றம் தஞ்சாவூர், அரவக்குறிச்சி ஆகியதொகுதிகளுக்கு இடைத்தோதல் அறிவிக்கபட்டவேளை முதலமைச்சரும் அ.தி.மு.கவின் பொதுச் செயலாளருமான ஜெயலலிதா உடல்நலமின்றி மருத்துவமனையில் இருந்தார்.

ஆயினும் கட்சியின் சார்பில் சின்னங்களை ஒதுக்கீடு செய்ய பரிந்துரைக்கும்  படிவத்தில் அவரது கையெழுத்திற்குப் பதிலாக, அவரது கை ரேகை அன்று பெறப்பட்டது.

இந்த நிலையில், இந்த வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தபோது ஜெயலலிதாவின் கை ரேகையை ஏற்றுக்கொண்டது குறித்து இந்தியத்தேர்தல் ஆணைய அதிகாரி நீதிமன்றத்தில் நேரில்தோன்றி விளக்கமளிக்க வேண்டுமென நீதிபதி; உத்தரவிட்டுள்ளார்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg