Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

ஐந்தாவது முறையாக மம்முட்டியுடன் இணையும் லட்சுமி ராய் !

In சினிமா
Updated: 17:32 GMT, Sep 27, 2017 | Published: 17:32 GMT, Sep 27, 2017 |
0 Comments
1384
This post was written by : Vithushagan

நடிகை லட்சுமி ராய் ஐந்தாவது முறையாக நடிகர் மம்முட்டிக்கு ஜோடியாக நடிக்கவுள்ளார்.

தமிழில் ராய் லட்சுமியை கவர்ச்சி வேடங்களுக்கு மட்டுமே பயன்படுத்தி வந்தனர். ஆனால், மலையாள சினிமாவில்அவருக்கென தனி அங்கீகாரத்தையும் முக்கியத்துவத்தையும் எப்போதுமே தர தவறியதே இல்லை.

அதிலும் மம்முட்டி, மோகன்லால் இருவரின் படங்களில் அவர் நடிப்பதை பார்க்கும் ரசிகர்கள், இந்த இருவருக்கும் பொருத்தமான ஜோடிஇவரை தவிர யாரும் இருக்க முடியாது என்றே சொல்கிறார்கள்.

அதிலும் மம்முட்டிக்கும் இவருக்குமான கெமிஸ்ட்ரி தான் ‘அண்ணன் தம்பி, பருந்து’, ‘சட்டம்பி நாடு’, ‘ராஜாதி ராஜா’ என நான்கு படங்களில் அடுத்தடுத்து இவர்களை ஜோடி சேர்த்தது.இப்போது ஐந்தாவது முறையாக மம்முட்டியும் ராய் லட்சுமியும் மீண்டும் ஜோடி சேர்கிறார்கள்.

பிரபல கதாசிரியரான சேது இயக்குனராக அறிமுகமாகும் ‘கோழி தங்கச்சன்’ படத்தில் மம்முட்டியுடன் இணைந்து லட்சுமி ராய் நடிக்க உள்ளார்.

மூன்று கதாநாயகிகள் கொண்ட இந்தப்படத்தில் ஏற்கனவே அனு சித்தாரா, தீப்தி சதி என இரண்டு கதாநாயகிகள் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளனர்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg