Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

தமிழர்களின் மனங்களை வெல்ல முடியாது! – நிமல்கா

In இலங்கை
Published: 03:22 GMT, Sep 28, 2017 |
0 Comments
1352
This post was written by : Varshini

இலங்கை ஜனாதிபதி மைத்திரி தலைமையிலான நல்லாட்சி அரசாங்கமும் தமிழ் மக்களின் மனங்களை வெல்லத் தவறிவிட்டதென தெரிவித்துள்ள மனித உரிமைகள் செயற்பாட்டாளரான நிமல்கா பெர்ணான்டோ, இனியும் அம்மக்களின் மனங்களை வெல்வது சாத்தியமற்றதென தெரிவித்துள்ளார்.

புதிய அரசியல் யாப்பு தொடர்பான இடைக்கால அறிக்கையில், பௌத்தத்திற்கு முன்னுரிமை வழங்கப்படும் என்ற விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது. இதனை மேற்கோள்காட்டியே நிமல்கா மேற்குறித்தவாறு குறிப்பிட்டுள்ளார்.

தற்போது நடைபெற்று வரும் ஐ.நா. மனித உரிமைகள் பேரவை அமர்வின் பக்க நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றிய போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

அத்தோடு, இலங்கையில் அமைக்கப்படவுள்ள காணாமல் போனோர் குறித்த அலுவலகம், சர்வதேசத்தின் நம்பிக்கையை பெறத் தவறிவிட்டதெனவும் நிமல்கா கூறியுள்ளார்.

பாதிக்கப்பட்ட தரப்பினர் இந்த அலுவலகத்தால் தீர்வை பெற்றுக்கொள்வார்கள் என்பதும் கேள்விக்குறியாகவே உள்ளதென நிமல்கா பெர்ணான்டோ குறிப்பிட்டுள்ளார்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg