Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site
தலைப்பு செய்திகள்

லீவிஸின் அதிரடி வீண்: மழையால் இங்கிலாந்துக்கு கிடைத்த அதிர்ஷ்டம்

In கிாிக்கட்
Published: 04:27 GMT, Sep 28, 2017 |
0 Comments
1267
icon_com
This post was written by : Anojkiyan
Australia v India: Semi Final - 2015 ICC Cricket World Cup

இங்கிலாந்து மற்றும் மேற்கிந்திய தீவுகள் அணிகளுக்கிடையிலான நான்காவது ஒருநாள் போட்டியில், இங்கிலாந்து அணி டக்வத் லுயிஸ் முறைப்படி 6 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது.

இந்த வெற்றியின் மூலம் ஐந்து போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் இங்கிலாந்து அணி 3-0 என்ற கணக்கில் தொடரை கைப்பற்றியுள்ளது.

நேற்று (புதன்கிழமை) ஓவல் மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில், நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற இங்கிலாந்து அணி முதலில் துடுப்பொடுத்தாட தீர்மானித்தது.

அதன்படி களமிறங்கிய மேற்கிந்திய தீவுகள் அணி, நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் 5 விக்கெட்டுகள் இழப்புக்கு 356 ஓட்டங்களை குவித்தது. இதில் அதிரடியாக துடுப்பெடுத்தாடிய எவின் லீவிஸ் ஆட்டமிழக்காது 176 ஓட்டங்களை பெற்றுக்கொண்டார். பந்து வீச்சில் கிறிஸ் வோக்ஸ் 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

இதனைதொடர்ந்து 357 என்ற வெற்றி இலக்கை நோக்கி பதிலுக்கு களமிறங்கிய இங்கிலாந்து 35.1 ஓவர்கள் நிறைவில் 5 விக்கெட்டுகள் இழப்புக்கு 258 ஓட்டங்களை பெற்றிருந்த வேளை மழைக்குறுக்கிட்டதால் டக்வத் லுயிஸ் முறைப்படி 6 ஓட்டங்கள் வித்தியாசத்தில் இங்கிலாந்து அணி வெற்றிபெற்றதாக அறிவிக்கப்பட்டது.

இதன்போது அணியின் அதிகபட்ச ஓட்டமாக ஜேசன் ரோய் 84 ஓட்டங்களையும், ஜோஸ் பட்லர் ஆட்டமிழக்காது 43 ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டனர். பந்து வீச்சில் அல்சாரி ஜோசப் 5 விக்கெட்டுகளை வீழ்தினார்.

இப்போட்டியின் ஆட்டநாயகனாக 130 பந்துகளில் 17 பவுண்ரிகள் 7 சிக்ஸர்கள் அடங்களாக 176 ஓட்டங்களை பெற்றுக்கொண்ட எவின் லீவிஸ் ஆட்டநாயகனாக தெரிவுசெய்யப்பட்டார்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg